கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் - காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக...
மூடப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் ஆய்வு - திருச்சி பரபரப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற வெடி மருந்து நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் கடந்த 2016-ல் நிகழ்ந்த பெரும் வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர், பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் பொதுமக்கள், விவசாய சங்கங்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த ஆலைக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் (NOC) மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆலை முற்றிலும் மூடப்பட்டது.
இந்த சூழலில், இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் ஐந்து பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் நேற்று முதல் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆலை இயங்கிய காலத்தில், இங்கிருந்து சுரங்கங்கள் மற்றும் பாறைகளை உடைப்பதற்கான PETN போன்ற வணிக ரீதியிலான வெடிபொருட்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும், கேரளாவில் உள்ள பல தனியார் குவாரிகளுக்கும் சட்டப்பூர்வமாக விநியோகம் செய்யப்பட்டன.

விபத்து தொடர்பான வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கேரளாவில் அவ்வப்போது நடைபெறும் வெடிவிபத்துகள் அல்லது சட்டவிரோத வெடிபொருள் கடத்தல் வழக்குகளில், சம்பந்தப்பட்ட வெடிபொருட்களின் லேபிள்கள் அல்லது மூலப் பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டன என Nia எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்வது வழக்கம்.
அந்தவகையில் இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் NIA சோதனை செய்ததாகச் கூறப்படுகிறது.














