மும்பை: மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கொடூர கிரிமினல் கண...
`LCU-வில் இணைந்த ரவி மோகன்' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் 'பென்ஸ்'. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.
கடந்த ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் அளித்த பேட்டி ஒன்றில், 'பென்ஸ்' திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து மற்றொரு முன்னணி நட்சத்திரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அது யார் என்பது குறித்த அறிவிப்பு வராமலே இருந்தது.
Welcome to the universe @iam_RaviMohan sir ❤️❤️ #Benz@offl_Lawrence@nivinofficial@iamsamyuktha_@Dir_Lokesh@PassionStudios_@TheRoute@GSquadOffl@Sudhans2017@Jagadishbliss@bakkiyaraj_k@SaiAbhyankkarpic.twitter.com/kxF51Vtb9Z
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 31, 2026
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நடிகர் ரவி மோகன் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, சம்யுக்தா உள்ளிட்டோரும், இசையமைப்பாளர் சாய் அபியங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களான பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட், ஜி ஸ்குவாட் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

















