செய்திகள் :

'இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்' - அஜித் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

post image

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார்.

இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து வந்தார். துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதும் சென்னைக்குக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாயாருடன் நடிகர் அஜித்
தாயாருடன் நடிகர் அஜித்

திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், முதல்வர் விஜய் அஜித்குமாரின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கக் கணக்கில் இருந்து பதிவிடப்பட்டிருக்கும் இந்தப் பதிவில், "அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் வசனத்தை சூர்யா சார் நிக்கச் சொன்னார்!" - ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிட... மேலும் பார்க்க

சென்னை: நடிகர் அஜித் குமாரின் அம்மா காலமானார்

நடிகர் மற்றும் கார் ரேசருமான அஜித் குமாரின் அம்மா மோகினி மணி. இவருக்கு வயது 85.தெலங்கானாவைப் பூர்வீகமாக கொண்ட அஜித் குமார், தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். சென்னையில் அஜி... மேலும் பார்க்க

What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் - தமிழ்சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன்... மேலும் பார்க்க

"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' - KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக 'ரீமேட்ச்' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். KPY Bala - Rematch Movie'ரீமேட்ச்' பட பூஜை... மேலும் பார்க்க

"அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" - சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்

நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார். Actor Satyendraஇவருடைய ... மேலும் பார்க்க

''எனது கதையில் நம்பிக்கை வைத்து...'' ரிலீஸாகும் ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷனின் 'சிக்மா' திரைப்படம்

தவெக தலைவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றன... மேலும் பார்க்க