செய்திகள் :

''எனது கதையில் நம்பிக்கை வைத்து...'' ரிலீஸாகும் ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷனின் 'சிக்மா' திரைப்படம்

post image

தவெக தலைவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்குத் தமன் இசையமைத்திருக்கிறார்.

Jason Sanjay - Sundeep Kishan
Jason Sanjay - Sundeep Kishan

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்திருந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். ஜூலை 31-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய், “‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது.

எனது கதையில் நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி.

அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி.

ஜூலை 31-ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரசியமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Jason Sanjay - Sundeep Kishan
Jason Sanjay - Sundeep Kishan

இத்திரைப்படம் பற்றி லைகா நிறுவனத்தின் தலைவர் தமிழ்குமரன், "'சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 31 என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் படத்தை அணுகியுள்ளார்." எனக் கூறியிருக்கிறார்.

"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' - KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக 'ரீமேட்ச்' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். KPY Bala - Rematch Movie'ரீமேட்ச்' பட பூஜை... மேலும் பார்க்க

"அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" - சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்

நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார். Actor Satyendraஇவருடைய ... மேலும் பார்க்க

20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்!

வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப, மொபைல் பொழுதுபோக்குத் துறையில் ஒரு புதிய முயற்சியை ஏற்படுத்தியிருக்கிறது 'கதை ஷார்ட்ஸ்' (Kadhai Shorts). தமிழ்நாட்டின் முதல் ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராம... மேலும் பார்க்க

Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் - ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்' செய்கிறதா?

சென்னையில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ராஜாராம் (அர்ஜுன்), தன்னுடைய மகள் நிலா (ப்ரீத்தி முகுந்தன்) தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும், அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்காகச் சிறுவயதிலேயே அ... மேலும் பார்க்க

'வில் அம்பு' பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் - இறுதிச்சடங்கு நாளை கோவையில் நடக்கிறது!

வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016ல் வெளியான 'வில் அம்பு' படத்தின் மூலம் இ... மேலும் பார்க்க

" 'கங்குவா' படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார், ஆனால்.!"- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான 'The Hollywood Reporter India' ஊடகத்... மேலும் பார்க்க