செய்திகள் :

20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்!

post image

வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப, மொபைல் பொழுதுபோக்குத் துறையில் ஒரு புதிய முயற்சியை ஏற்படுத்தியிருக்கிறது 'கதை ஷார்ட்ஸ்' (Kadhai Shorts).

தமிழ்நாட்டின் முதல் ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளமான இதனை, இதன் நிறுவனர் கரண் தயாநிதி மாறன் இன்று (28.05.2026) சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அறிமுகப்படுத்தினார்.

Kadhai Shorts Team
Kadhai Shorts Team

இந்த வெளியீட்டு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், நடிகை ரோகிணி, மற்றும் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மொபைல் திரைக்கேற்ற புதிய வடிவத்தில் கதையாடலை வழங்கும் இந்த தனித்துவமான முயற்சிக்குத் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவர்கள் மனதாரத் தெரிவித்தனர்.

மொபைல் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப, 'குட்டி சீரிஸ்' என்ற பெயரில் வெறும் இரண்டு நிமிட சினிமா தரத்திலான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை இந்த தளம் அறிமுகப்படுத்துகிறது.

உள்ளூர் வட்டார வழக்கு, நமது கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த மைக்ரோ டிராமாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் தங்களுக்குப் பிடித்தமான தொடர்களைக் பார்க்கும் வசதிகளை இது ஏற்படுத்தி தருகிறது.

Actress Rohini - Kadhai Shorts Launch
Actress Rohini - Kadhai Shorts Launch

தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அடுத்த ஓராண்டிற்குள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும், அந்தந்த நிலத்தின் தனித்துவமான தன்மையோடு தனது சேவைகளை ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கரண் தயாநிதி மாறன் பெருமையோடு குறிப்பிட்டார்.

Blast Review: இது 10000 வாலா வெடியா? ஆக்ஷன் கிங் - ப்ரீத்தி முகுந்தன் காம்போ `பிளாஸ்ட்' செய்கிறதா?

சென்னையில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ராஜாராம் (அர்ஜுன்), தன்னுடைய மகள் நிலா (ப்ரீத்தி முகுந்தன்) தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும், அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்காகச் சிறுவயதிலேயே அ... மேலும் பார்க்க

'வில் அம்பு' பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் - இறுதிச்சடங்கு நாளை கோவையில் நடக்கிறது!

வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016ல் வெளியான 'வில் அம்பு' படத்தின் மூலம் இ... மேலும் பார்க்க

" 'கங்குவா' படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார், ஆனால்.!"- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான 'The Hollywood Reporter India' ஊடகத்... மேலும் பார்க்க

Karuppu: 'காந்தாரா' படம் பார்த்த சமயத்துல தான் கிளைமாக்ஸ்-க்கு ஐடியா தோணுச்சு'- ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகமான 'The Hollywood Reporter India' ஊடகத்திற்கு பேட்டி ... மேலும் பார்க்க

"'கருப்பு' படத்தை 'Good Bad Ugly' படத்தோட ஒப்பிடுறாங்க, ஆனா நாங்க.!"- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க

'கருப்பு' படம் விஜய் சாருக்காகத்தான் முதலில் எழுதப்பட்டது, ஆனால்.!'- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க