ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்...
Karuppu: 'காந்தாரா' படம் பார்த்த சமயத்துல தான் கிளைமாக்ஸ்-க்கு ஐடியா தோணுச்சு'- ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் ஆங்கில ஊடகமான 'The Hollywood Reporter India' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி 'கருப்பு' படம் தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தவகையில் 'கருப்பு' பட காட்சிகள் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, " 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது.
நான் அந்த படத்தோட இயக்குநரைக் கூப்பிட்டு, 'உங்க படத்தோட ஒரு காட்சியில இருந்து நான் ஒரு காட்சியை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கப் போறேன்னு' சொன்னேன்.
அந்த கன்னட இயக்குநருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'நீங்க கூப்பிட்டு சொன்னதே ஒரு இன்ஸ்பிரேஷனான விஷயம் தான்' அப்படின்னு சொன்னார்.
எனக்கு அணுகக்கூடிய தூரத்தில இருக்கவுங்களுக்கு போன் பண்ணி தகவல் சொல்வேன். இதையே நான் ஜிம் கேரிக்கு போன் பண்ணி, 'லையர் லையர்' படத்துல இருந்து ஒரு சீன் எடுக்கப் போறேன்னு சொல்ல முடியாது.
'சிங்கம்' படத்தோட காட்சிக்கு அப்புறம், இன்னொரு சீக்வென்ஸ் இருந்தது. ஆனா எனக்கு அந்த கிளைமாக்ஸ்ல திருப்தி இல்லை. அது எனக்கு ஒரு மாதிரி உறுத்தலாவே இருந்தது. ஏதோ ஓகே-ங்கிற மாதிரி தான் தோணுச்சு.

அதுக்கப்புறம் தான், நான் 'காந்தாரா' படத்தோட மார்னிங் ஷோ பார்த்தேன். அந்த படத்தோட கடைசி 10 நிமிஷத்துல, தியேட்டர்ல இருந்த மக்கள் நிஜமாவே ஒரு பரவச நிலைக்கு போயிட்டாங்க. அது என்னை ரொம்ப ஈர்த்தது. அந்த சமயத்துல தான் எனக்கு இந்த படத்தோட கிளைமாக்ஸ்-க்கு ஐடியா தோணுச்சு" என்று கூறியிருக்கிறார்.



















