செய்திகள் :

பக்ரீத்: தலையிட்ட அரசு; பலியிடுவதில் இருந்து உயிர் தப்பிய வைரல் 'டொனால்டு ட்ரம்ப்' எருமை மாடு!

post image

இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். இதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை பல ஆயிரம் செலவு செய்து வாங்கி பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நிறுத்தி வைப்பர்.

வளைகுடா நாடுகளில் ஒட்டகம் பலியிடப்படுவதுண்டு. பங்களாதேஷில் ஒரு எருமை காளைக்கு டொனால்டு ட்ரம்ப் என்று பெயரிட்டு பக்ரீத் பண்டிகைக்காக அதன் உரிமையாளர் ஜியா உதின் என்பவர் வளர்த்து வந்தார். இந்த மாட்டிற்கு டொனால்டு ட்ரம்ப் சூட்டப்பட்டு இருந்ததால் அது சமூக ஊடங்களில் பெரிய அளவில் வைரலானது. பக்ரீத் பண்டிகைக்கு டொனால்டு ட்ரம்ப் மாடு பலியிடப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பான செய்திகள் பரவியதால் அந்த மாட்டை பார்க்க தினமும் ஏராளமானோர் ஜியா வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். இது குறித்து பொதுமக்களின் ஆர்வம் பெருகி வந்த நிலையில், அரசு அதிகாரிகள் கடைசி நேரத்தில் இதில் தலையிட்டனர்.

டொனால்டு ட்ரம்ப்

பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது, எருமை மாட்டை காப்பாற்றவும், அதனை வாங்கியவருக்கு அந்த பணத்தைத் திரும்பப் கொடுக்கவும், அரசாங்க பராமரிப்பின் கீழ் டாக்காவில் உள்ள தேசிய மிருகக்காட்சிசாலைக்கு மாற்றவும் உத்தரவிட்டார். இதையடுத்து அரசு அதிகாரிகள் உடனே விரைந்து செயல்பட்டு அந்த மாட்டை விலைக்கு வாங்கி, டாக்காவில் உள்ள வங்கதேச தேசிய உயிரியல் பூங்காவிற்கு மாற்றினர். அங்கு அந்த விலங்கு பலியிடப்படுவதற்குப் பதிலாக, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் 700 கிலோ எடை கொண்ட அந்த எருமை மாட்டை அரசே வாங்கியது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், "பாதுகாப்புச் சார்ந்த கவலைகள் மற்றும் பொதுமக்களின் வழக்கத்திற்கு மாறான அளவிலான ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக, கடைசித் தருணத்தில் அந்த எருமையை பலியிடுவதிலிருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது," என்று தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள அந்த மாட்டை பாதுகாப்பதற்கும், பார்வையாளர்கள் அதனைப் பாதுகாப்பான முறையில் காணும் வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஒரு பிரத்யேக கூண்டில் அடைக்கப்பட்டுள்ள அந்த எருமை, உயிரியல் பூங்காவின் விலங்குகளில் பார்வையாளர்களால் அதிகம் புகைப்படம் எடுக்கப்படும் ஒன்றாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அந்த மாட்டின் உரிமையாளர் அளித்திருந்த பேட்டியில் ந் ''மாட்டின் தலையில் இருந்த முடியைப் பார்த்ததும், என் தம்பி வேடிக்கையாக அதற்கு 'டொனால்ட் டிரம்ப்' என்று பெயரிட்டார்.

வெண்மையான எருமைகள் பொதுவாக அமைதி குணம் கொண்டவை. சீண்டப்பட்டால் ஒழிய, அவை ஆக்ரோஷமாக நடந்துகொள்வதில்லை," என்று கூறினார். மாட்டை நேரில் பாத்தவர்கள் அதனை டொனால்டு ட்ரம்புடன் ஒப்பிட்டதை ஏற்றுக்கொண்டனர். பேஸ்புக்கில் அந்த மாட்டின் படங்களைப் பார்த்தபோது, ​​அது அச்சு அசல் டொனால்ட் டிரம்ப் போலவே காட்சியளித்தது," என்று ஒரு பெண் சமீபத்தில் வங்கதேச நாளிதழான 'ப்ரோதோம் அலோ'விடம் தெரிவித்தார்.

மற்றொரு எருமையும் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. 750 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள அந்த எருமை மாட்டிற்கு, "பெஞ்சமின் நெதன்யாகு" எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டு இருந்தது. ஆனால் டொனால்டு ட்ரம்ப் எருமை காப்பாற்றப்பட்டது போன்று நெதன்யாகு எருமை காப்பாற்றப்பட்டதாக தகவல் இல்லை.

காலடியில் சமோசா; பயணிகளை அதிரவைத்த வியாபாரியின் வீடியோ - விளக்கமளித்த ரயில்வே!

ரயில் பயணங்களின் போது ஜன்னலோரம் அமர்ந்து, வேடிக்கை பார்த்தபடியே சுடச்சுட ஒரு கப் டீயும், சமோசாவும் சாப்பிடுவது எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனால், அடுத்த முறை நீங்கள் ரயிலில் சமோசா வாங்கும்போ... மேலும் பார்க்க

`மாப்பிளைக்கு சுகர் இருக்கு'- தரகு பணம் தராத ஆத்திரம்; மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய நபர்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மண்ட... மேலும் பார்க்க

பக்ரீத் ஆட்டு விற்பனை அமோகம்; குவிந்த ஆடுகள்; விலை பேசி தூக்கி சென்ற மக்கள்: வாடிப்பட்டி சந்தை Album

பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக்ரீத் ஆட்டு விற்பனை பக... மேலும் பார்க்க

காத்திருந்த 42 மணமகன்கள்: திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட 'திருமண மோசடி' - ஊரையே அதிரவைத்த சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 24) ஒரே மேடையில் 42 பேருக்கு திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த திருமண விழாவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணமகன்... மேலும் பார்க்க

'ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் விபத்து காப்பீடு' - மணமகன் குடும்பத்தின் திருமணப் பரிசு வைரல்!

திருமணத்தை சிலர் மிகவும் ஆடம்பரமாக நடத்துவதுண்டு. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மணமக்களுக்கு பரிசு வழங்குவது வழக்கமான ஒன்று. அதேசமயம் மணமக்கள் வீட்டார் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு ரி... மேலும் பார்க்க

மணலி: எண்ணெய் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; வெடித்துச் சிதறிய பேரல்கள்.. பதறவைக்கும் காட்சிகள்!

சென்னை அடுத்த மணலி, தாண்டாம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்கள் அடுத்தடுத... மேலும் பார்க்க