செய்திகள் :

"'கருப்பு' படத்தை 'Good Bad Ugly' படத்தோட ஒப்பிடுறாங்க, ஆனா நாங்க.!"- ஆர்.ஜே பாலாஜி

post image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி 'கருப்பு' படத்தை 'Good Bad Ugly' படத்துடன் ஒப்பிடுவது குறித்து பேசியிருக்கிறார்.

கருப்பு திரைப்படம்
கருப்பு திரைப்படம்

இது தொடர்பாக பேசிய அவர், " எனக்கு முதல் பாதி எந்தவித ஆரவாரமும் இல்லாமல் நேர்த்தியாகவும், இரண்டாம் பாதி அனைத்து அம்சங்களும் நிறைந்த பக்காவான கமர்ஷியல் படமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.

மக்கள் இப்போது என் திரைப்படத்தை 'Good Bad Ugly' திரைப்படத்தோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால், நாங்கள் படப்பிடிப்பில் பாதி முடித்திருந்தபோது கூட அந்தத் திரைப்படம் வெளியாகவில்லை.

என் திரைப்படத்தில் கிட்டத்தட்ட 7–8 சிறப்புத் தோற்றங்களை (Cameos) வைத்திருந்தேன்.

அந்தச் சமயத்தில்தான் நான் 'கல்கி' திரைப்படத்தைப் பார்த்தேன். அதில் ராஜமௌலி சாரும், ராம் கோபால் வர்மா சாரும் எதிர்பாராத விதமாகத் தோன்றியிருந்தார்கள்.

அதைப் பார்த்த பின்பு, இந்த யோசனை மிகவும் பழையதாகிவிட்டது போல் தோன்றியதால் நான் அந்த சிறப்புத் தோற்ற யோசனையைக் கைவிட்டேன்.

கருப்பு படம்
கருப்பு படம்

'Good Bad Ugly' வெளியாகியிருந்தாலும் என்னால் 'சிங்கம்' ரெஃபரன்ஸை தவிர்க்க முடியவில்லை. அதேபோல 'லியோ' ரெஃபரன்ஸையும் தவிர்க்க முடியவில்லை.

எது எப்படியாக இருந்தாலும், நான் எப்படி நினைத்தேனோ அதே போல் மக்கள் இந்தத் திரைப்படத்தைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

'கருப்பு' படம் விஜய் சாருக்காகத்தான் முதலில் எழுதப்பட்டது, ஆனால்.!'- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க

"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'டபுள் ஆக்குபன்சி'. இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடி... மேலும் பார்க்க

'உப்பு புளி காரம்' சீசன் 2 எதனால் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' என மாற்றப்பட்டது? - ராஜ் ஐயப்பா பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டாரில் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. 100 எபிசோடுகள் கொண்ட 'Long Format' வெப் சீரிஸாக இது வெளிவரவிருக்கிறது. நடிகர் போஸ் வெங்கட், மெட்டி ஒலி... மேலும் பார்க்க

"என் போட்டோ வச்சு 'மணி பசிக்குது மணி'னு ஒரு ஹோட்டலே வந்துருச்சு" - நடிகர் ஜெயராம் கலகல | Mimicry

ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இப்பட... மேலும் பார்க்க

`பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டா, அதான் கஷ்டமா இருக்கு!' - மறைந்த‌ நடிகை தமிழ்செல்வியின் கணவர்

'சம்சார சங்கீதம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி தனது திருமணம் வரை சுமார் ஐம்பது படங்கள் வரை நடித்திருப்பவர் நடிகை தமிழ்செல்வி.'காலம் மாறிப் போச்சு', 'பொற்காலம்', 'வெற்றிக் கொடி கட்டு'... மேலும் பார்க்க

"அவரை நான் மீட் பண்ணினப்போ!" - 'முதல்வன் Meets முதல்வர்' தருணம் பற்றி அர்ஜூன்!

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் 'ப்ளாஸ்ட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வர் விஜய... மேலும் பார்க்க