செய்திகள் :

RR vs SRH: "சூரியவன்ஷியுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம்!" - ரியான் பராக்

post image

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

நடந்து முடிந்த இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இமாலய இலக்கை நிர்ணயித்ததும், அதை துரத்த முடியாமல் எதிரணி ஆல் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த போட்டியிலும் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஹைதராபாத் அணி.

RR vs SRH
RR vs SRH

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரியான் பராக், " இது ஒரு நல்ல போட்டி. இன்னும் நாங்கள் 260 ரன்கள் வரை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

வைபவ் நல்ல தொடக்கம் கொடுத்த பிறகு, இன்னிங்ஸை எப்படிப் பெரிய ஸ்கோராக முடிக்க வேண்டும் என்பதில் இன்னும் வேலை செய்ய வேண்டும். எதிரணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், நாங்கள் அமைதியை இழக்காமல் மீண்டும் போட்டிக்குள் வந்தோம்.

வைபவுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம். அவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம். அவர் பேட்டிங்கை மிகவும் விரும்புகிறார். அதனால் நெட்ஸில் நிறைய பயிற்சி கொடுக்கிறோம். பிறகு, அவர் மைதானத்தில் சென்று தனது வேலையை செய்கிறார்.

கடைசி இரண்டு போட்டிகளும் நாக்அவுட் போன்ற அழுத்தமான போட்டிகள் என்பதால், அனைவரும் இன்னும் அதிக கவனத்துடனும் ஆற்றலுடனும் விளையாடினர். சீசன் முழுவதும் நன்றாக இருந்தோம். ஆனால், இந்த இரண்டு போட்டிகளில் அனைவரும் ஒரு படி மேலே சென்றனர்.

ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் நான் பெரிதாக எதையும் சொல்ல மாட்டேன். முதல் பந்தை அபிஷேக்கிற்கு வீசியபோது அது வைடாக சென்றது. அதனால், ‘கொஞ்சம் நேராக வீசு’ என்று சொன்னேன்.

RR vs SRH
RR vs SRH

அடுத்த பந்திலேயே விக்கெட் எடுத்துவிட்டு, ‘இது போதுமா?’ என்று சிரித்தார். உலக கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்தான் அவர். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒருவரிடம் அதிக அறிவுரை தேவையில்லை.

நாளை ஓய்வு எடுப்போம். அனைவரும் பேட்டிங்கும், பந்துவீச்சும் செய்துவிட்டார்கள். அதனால், ஓய்வெடுத்து அடுத்த போட்டிக்குத் தயாராகப் போகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

அஸ்தமனமான சன்ரைசர்ஸ்; சம்பவத்தை நிகழ்த்திய சூர்யவன்சி! - எப்படி வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்?

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபயர் - 2-க்கு முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸுக்கு இடையிலான அந்தப் போட்டிதான் இறுதிச் சுற்றில் ஆர்... மேலும் பார்க்க

RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" - ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 27) விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்றஇந்த இக்கட்டான போட்டியில்,... மேலும் பார்க்க

RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" - கம்மின்ஸ் வருத்தம்

ஐபிஎல் 2026 நேற்றைய (மே 27) தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி ... மேலும் பார்க்க

RCB-யின் 254 ரன்கள்: `இது ஒரு முட்டாள்தனமான கேள்வி!’ - பத்திரிகையாளரிடம் சீறிய கிளென் பிலிப்ஸ்

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், குஜராத் அணியின் வீரர் கிளென் பி... மேலும் பார்க்க

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன.... மேலும் பார்க்க

IPL 2026: RCB-ன் ஆதிக்கம் முதல் RR-ன் கடைசி என்ட்ரி வரை... - ஐபிஎல் ப்ளே ஆஃப் ரேஸ் ஒரு பார்வை!

ஐபிஎல் 2026 தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிர... மேலும் பார்க்க