செய்திகள் :

புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை

post image

புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார்.

இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மைனரைக் காப்பாற்ற அரசியல்வாதிகள் தலையிட்டனர். அதோடு அந்த வாலிபருக்கு அவர் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் ராஜ மரியாதை வழங்கப்பட்டது.

மது அருந்தி இருக்கிறாரா என்பதை சோதிக்க ரத்த பரிசோதனைக்காக மைனர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த டாக்டர்கள் அந்த மைனரின் ரத்தத்தையே மாற்றி அவர் மது அருந்தவில்லை என்று சான்றிதழ் வழங்கினர்.

சம்பவத்தின் போது மைனர் குடிபோதையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த மைனரின் இரத்த மாதிரிகளை மாற்றி மோசடி செய்ய முயன்றதாக மைனரின் தந்தை அகர்வால் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

விபத்துக்குப் பொறுப்பேற்குமாறு அவர்களது டிரைவரை வற்புறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. மைனர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

விபத்து ஏற்பட்ட கார்
விபத்து ஏற்பட்ட கார்

மைனர் கடந்த 2024ம் ஆண்டு மே 19ம் தேதி தனது நண்பர்களுடன் அதிகாலை வரை மது அருந்திவிட்டு மிகவும் ஆடம்பரமான போர்ஸ் காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது. இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த மைனர் வாலிபருக்கு ஜாமீன் கேட்டு அவரது பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் கடந்த 22 மாதங்களாக சிறையில் உள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்குவதாக கோர்ட் தெரிவித்தது. விசாரணை நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மைனர் மகன் ஜாமீனில் வெளியில் வந்ததை அந்த வாலிபரின் தந்தை விஷால் அகர்வால் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொண்டாடிய வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது. அகர்வால் தனது மகன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து ஆடிப்பாடி தனது மகன் ஜாமீனில் வெளி வந்ததைக் கொண்டாடி இருக்கிறார்.

அதோடு இந்தக் கொண்டாட்டத்தில் தனது மகனுக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார். கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த இரண்டு மாலைகளில் ஒன்று ரூபாய் மாலையாகும்.

ஆட்டம் பாட்டத்தில் அகர்வால் வேறொருவரால் தூக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது மகன் தனது தாயாரைத் தூக்கி அவர்கள் நடனமாடினார்கள். இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

வாணியம்பாடி: திருநங்கையைத் தாக்கிய இளைஞன் கைது; ஓராண்டு திருமண வாழ்க்கை; ஊர் சுற்ற பைக்

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் திருநங்கை பூமிகா. இவரும், கோனாமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் வல்லரசு என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு த... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி”- சக மாணவன் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதே கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

நெல்லை: `வீடியோ எடுத்து அனுப்பு' - ஆண் நண்பருக்காக லேடீஸ் ஹாஸ்டலில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண்

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற சிறுமி; சிகிச்சையின்போது பிரசவம்; போக்சோ வழக்கில் இளைஞர் கைது

பாட்டி, தாய், சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சையின்போது 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்திய நிலையில் இதற்கு காரணமான வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்... மேலும் பார்க்க

கறி சமைக்க `ஓசி'-யில் வாத்து கேட்ட போதை கும்பல் - தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட தருவை என்ற கிராமப்பகுதியில், மேல முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வாத்துக்களை வளர்த்து தொழில் செய்து வருகிறார். அவரிடம் உள்ள வ... மேலும் பார்க்க