செய்திகள் :

ஈரோடு: காலி மதுபாட்டில் விவகாரம், 3-வது நாளாக மூடப்பட்டுள்ள மதுபான கடைகள்!

post image

காலி மதுபாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகள், வனவிலங்குகள், கால்நடைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், விளைநிலங்களும் நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. இதனை தவிர்க்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலிலும் வில்லை கட்டப்படுகிறது. மது வாங்கும் நபரிடம் 10 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, வில்லையுடன் திரும்ப ஒப்படைக்கப்படும் காலி மது பாட்டிலுக்கு 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது.

பணியாளர்கள் போராட்டம்

இந்த திட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற முடியாது என அதன் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கென தனியாக நபர்களை டாஸ்மாக் நிர்வாகம் நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் இவர்களின் கோரிக்கையை தற்போது வரை ஏற்கவில்லை. இதனைக் கண்டித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பார்களில் மது விற்பனை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் சுமார் 15 கோடி ரூபாய்க்கு மது விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிச்சுமை குறைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என பணியாளர்கள் கூறியுள்ளனர்.

வேளாண் கடன் தள்ளுபடி… முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ எனச் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்திருந்தது. விவசாய... மேலும் பார்க்க

இந்தியாவில் அறிமுகமான 'America First': இனி அமெரிக்கா விசா நேர்காணலுக்கு யாருக்கு முன்னுரிமை?

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இந்திய பயணத்தில் இருக்கிறார்.நேற்று இந்தியாவில், 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்கிற விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர்.அமெரிக்கா ஃபர்ஸ்ட்‌ என்ப... மேலும் பார்க்க

தாமதமாகும் நெல் கொள்முதல் : முளைத்த நெல்லை கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

முளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லை மேலும் பார்க்க

யார் முதல்வரானாலும் நேர்மையாகச் செயல்பட வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிவிடலாம்… ஆட்சிக்கு வந்த பிறகு அடக்குமுறைகளைக் கையாண்டு துரோகங்கள் இழைத்தாலும் விவசாயிகள் ஏமாளிகளாகவே இருப்பார்கள்’ எனத் தப... மேலும் பார்க்க