செய்திகள் :

"மற்ற கட்சிகளுக்கு எதிராக ED ஊடுருவல் வேண்டும்; இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு" - பினராயி விஜயன்

post image

கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

அதனையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழாக்கப் படுத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது...

"நீண்ட காலமாகவே ED எனது வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு பெரும் திருப்தியைத் தரும் என்று நினைக்கிறேன். பினராயி விஜயனின் வீடு ஏன் சோதனையிடப்படவில்லை, ஏன் கைது செய்யப்படவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை

பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் எழுந்துள்ளன.

தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிராக ED-வின் ஊடுருவலும் நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடாக உள்ளது.

இவை எதுவும் எங்களை பயப்படுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் எங்களை அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது.

உள்ளூர் மக்களின் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கு வெளிப்பட்டுள்ளது. எதிரிகள் என்னைத் தாக்கத் தயாராகும் போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவை நான் பெற்றேன்.

இன்று தோழர்கள் நிரூபித்திருப்பது என்னவென்றால், அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதுதான். இதுதான் எங்கள் வலிமை. அனைத்து சோதனைகளையும் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்".

ஓசூர், கோயம்புத்தூர், மதுரைக்கு மெட்ரோ - வேறு என்ன கோரிக்கை? நிர்மலா சீதாராமன் - விஜய் சந்திப்பு!

இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கையோடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.இந்தச் சந்திப்பில் விஜய் வைத்த கோரிக்கை குறித்த அறிக்கை.."மாண்புமிகு... மேலும் பார்க்க

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" - ஆவேசமான பினராயி விஜயன்!

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். பினராயி விஜயன் பேசுகையில், ​"அனைவர... மேலும் பார்க்க

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' - விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நய... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தவெக திருவெறும்பூர்... மேலும் பார்க்க

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' - பொன்முடி சாடல்

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ... மேலும் பார்க்க