செய்திகள் :

IPL 2026: RCB-ன் ஆதிக்கம் முதல் RR-ன் கடைசி என்ட்ரி வரை... - ஐபிஎல் ப்ளே ஆஃப் ரேஸ் ஒரு பார்வை!

post image

ஐபிஎல் 2026 தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றை அலங்கரித்த இந்த நான்கு அணிகள் குறித்து பார்ப்போம்.

நடப்பு சாம்பியன்களின் கம்பீரமான ஆதிக்கம்! (RCB)

கடந்த ஆண்டு தங்களது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, இந்த ஆண்டும் அதே சாம்பியன் உத்வேகத்துடன் களம் கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான இந்த அணி, 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் +0.783 என்ற சிறந்த ரன் ரேட் அடிப்படையில் நேரடியாக குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

RCB
RCB

பேட்டிங்கில் 'ரன் மெஷின்' விராட் கோலி தூணாக நின்று அணியைத் தாங்க, பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளார்.

வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களின் பங்களிப்பும் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹைதராபாத்திடம் தோற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சமபலத்துடன் திகழும் ஆர்சிபி, தங்களது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.

துவக்க வீரர்களின் அசுர பலமும், வேகப்பந்து வீச்சும்! (GT)

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த சீசனில் தங்களது அசாத்தியமான பேட்டிங் பலத்தால் எதிரணிகளை மிரட்டியிருக்கிறது.

ஆரஞ்சு கேப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை குஜராத் அணியின் சாய் சுதர்சன் (638 ரன்கள்) மற்றும் சுப்மன் கில் (616 ரன்கள்) ஆகியோரே ஆக்கிரமித்துள்ளனர்.

இவர்களின் பலமான துவக்கம் அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட்டாக அமைந்திருக்கிறது.

GT
GT

பந்துவீச்சை பொறுத்தவரை, ககிசோ ரபாடா 24 விக்கெட்டுகளுடனும், ரஷித் கான் 19 விக்கெட்டுகளுடனும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர்.

18 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடம் பிடித்ததால், இவர்களுக்கும் பைனலுக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள் (குவாலிபயர் 1 & 2) கிடைக்கவுள்ளது அணிக்கு கூடுதல் சாதகம்.

2022 சாம்பியனான குஜராத், மீண்டும் கோப்பையைக் கைப்பற்ற முழு பலத்துடன் தயாராக இருக்கிறது.

அதிரடி பேட்டிங்கும், மிரட்டலான ஃபார்மும்! (SRH)

பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசன் முழுவதும் தங்களது ஃபியர்லெஸ் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் பலமான ஆர்சிபி அணியையே 255 ரன்கள் குவித்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசுர ஃபார்மில் இருப்பதை நிரூபித்துள்ளனர்.

SRH
SRH

இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடி பேட்டிங் எந்த ஒரு பந்துவீச்சு கூட்டணியையும் சிதறடிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

பந்துவீச்சில் ஈஷான் மாலிங்கா அணிக்கு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தருகிறார். ரன் ரேட் சற்றே குறைவாக இருந்ததால் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டியிருந்தாலும், தற்போதைய ஃபார்மின் படி இவர்களை வீழ்த்துவது எதிரணிகளுக்கு அவ்வளவு எளிதல்ல.

நெருக்கடியைச் சமாளித்து கடைசி நிமிடத்தில் மாஸ் என்ட்ரி! (RR)

ப்ளே ஆஃப்-ன் கடைசி இடத்திற்கான கடுமையான போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு அதிர்ச்சியளித்து, நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்பீரமாக உள்ளே நுழைந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இளம் வீரர் ரியான் பராக் தலைமையில் களமிறங்கிய இந்த அணிக்கு, 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார். இவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அனுபவ வீரர்களின் கூட்டணியும் இணைந்துள்ளது.

RR
RR

லீக் சுற்றின் நடுவே தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், மிக முக்கியமான கடைசிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

2008-க்கு பிறகு மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் கனவோடு எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது.

எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!!!

KKR vs DC: "இந்த சீசனில் ஹைதராபாத் அணி மிகவும் வலிமையானதாக தெரிகிறது!"- டெல்லி கேப்டன் அக்சர் படேல்

ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் நேற்று (மே24) மோதின.இந்த கடைசி போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஒரு ஆறுதல் வெற்றியின் மூலம் 6-வது இடத்த... மேலும் பார்க்க

கோலியின் 'No Handshake' எல்லை மீறிய ரசிகர்கள்! - ட்ராவிஸ் ஹெட் மனைவிக்கு தொடரும் சோகம்!

ஐபிஎல் 2026-ன் பிளேஆஃப் தகுதியைப் பொறுத்தவரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு முக்கியத்துவமற்ற போட்டியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், வி... மேலும் பார்க்க

ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! - கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்... மேலும் பார்க்க

காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி... மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அ... மேலும் பார்க்க

RCB: "கோலியுடன் விளையாடும்போது என் பேட்டிங் மேம்படுகிறது" - அனுபவம் பகிரும் தேவ்தத் படிக்கல்

ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ''2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில... மேலும் பார்க்க

'கிரிக்கெட் தான் என் வாழ்க்கை, ஆனால்.!' - ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர்

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ... மேலும் பார்க்க