செய்திகள் :

வேலூர்: செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டதாகப் புகார்; தவெக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து போராட்டம்

post image

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் மேற்கண்ட செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக, கடந்த 22-ம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றிருந்த த.வெ.க ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை, செங்கல் சூளை உரிமையாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் மடக்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் வாக்குவாதம் செய்த காட்சி.
த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் வாக்குவாதம் செய்த காட்சி.

அன்றைய தினமே, த.வெ.க நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்தப் புகாரில், ```இப்போது டி.வி.கே ஆட்சி நடக்கிறது. இதனால், சூளை வைத்திருக்கும் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு மாமூல் தர வேண்டும். இல்லையெனில், நீங்கள் சூளை தொழில் செய்ய முடியாது’ என மிரட்டுகின்றனர். டி.வி.கே பிரமுகர்களை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தனர்.

த.வெ.க தரப்பிலும், ``அந்தப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது. பர்மிட் இல்லாமலே லாரிகளில் சூளைக்கு மண் கொண்டுவருகின்றனர். திருட்டு மண் எடுக்கும்போது வீடியோ எடுத்தும், கனிவளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரி வந்தபோது, புகாருக்குள்ளான சூளைகளைக் காட்டச் சொன்னதால் அவர்களுடன் த.வெ.க நிர்வாகிகளும் உடன் சென்றார்கள்.

அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் மடக்கி எச்சரித்தார்கள். இதையடுத்து, அதிகாரிகள் சென்ற பிறகு வேண்டுமென்றே மாமூல் கேட்டுவந்ததாக த.வெ.க நிர்வாகிகள் மீது பழிசுமத்துகிறார்கள்’’ என்று விளக்கமளிக்கின்றனர்.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்

கனிமத் திருட்டைத் தடுத்ததால் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் த.வெ.க ஒன்றியச் செயலாளர் தரப்பினர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து வேலூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தரப்பினர் இன்றைய தினம் ஏராளமானோரைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

``எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. த.வெ.க நிர்வாகிகள் மாமூல் கேட்டுதான் வந்தார்கள்’’ எனத் திரும்பத் திரும்ப முறையிடுவதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தைக் கலைக்கச் செய்தனர்.

மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அமைச்சர் பி.விஸ்வநாதன்

தமிழ்நாட்டின் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பி.விஸ்வநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேகதாது அணை விவகாரம், ஆளுநர் உடனான உறவு... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கு: ``இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?" - தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டது சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக. அதைத் தொடர்ந்து, 60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சியில் இருந்த திம... மேலும் பார்க்க

`மின் தடை பிரச்னைகளுக்குக் காரணம் இதுதான்..!' - அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதென்ன?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் சோலார், விண்ட் பவர் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள், வெண... மேலும் பார்க்க

'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' - தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி மக்களுக்கு 'குக்கர்' பரிசு வழங்கி உற்சாகமூட்டியி... மேலும் பார்க்க

'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு - விவரம் என்ன?

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.சி.வி அணிதவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அதிமுகவுக... மேலும் பார்க்க

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொட... மேலும் பார்க்க