செய்திகள் :

மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அமைச்சர் பி.விஸ்வநாதன்

post image

தமிழ்நாட்டின் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பி.விஸ்வநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேகதாது அணை விவகாரம், ஆளுநர் உடனான உறவு மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்படுவது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் நானும், முதலமைச்சர் அவர்களும் இதில் ஒரே நேர்க்கோட்டில்தான் தெளிவாக இருக்கிறோம்.

உயர் கல்வித்துறை காங்கிரஸ் அமைச்சர் பி.விஸ்வநாதன்
உயர் கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளுநருக்கும் உயர்கல்வித்துறைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளால் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமானது. மற்ற அமைச்சர்களைப் போல ஆளுநரை எதிர்கொள்ளும் துணிவும் ஆற்றலும் எனக்கும் இருக்கிறது. ஆனால், 'எதிர்கொள்ளுவேன்' என்பதை விட, ஆளுநருடன் மிகச் சரியான முறையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். கல்வித்துறை வல்லுநர்களுடனும், முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் செயல்பட்டு, தமிழக மக்களுக்குத் தேவையான வெற்றிகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபடுவோம். `ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்' என்பதை அறிந்தவன் நான்.

அமைச்சர், ஆளுநருடன் ஒரு நேர்த்தியான மற்றும் இணக்கமான உறவை ஏற்படுத்தி, கல்வித்துறைக்கும் மக்களுக்கும் தேவையான நன்மைகளை அரசு முறைப்படி பெற்றுத் தரும். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகத் தெளிவாக இருக்கிறார். அதுவே எங்களது கூட்டு நிலைப்பாடு. மேலும், இந்த விவகாரத்தில் புதிய அரசுக்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை பொறுத்திருக்கலாம்.

உயர் கல்வித்துறை காங்கிரஸ் அமைச்சர் பி.விஸ்வநாதன்
உயர் கல்வித்துறை காங்கிரஸ் அமைச்சர் பி.விஸ்வநாதன்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறை மற்றும் பேராசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசித்து வருகிறோம். இப்போதுதான் அமைச்சராகப் பொறுப்பேற்று மதுரைக்கு வந்திருக்கிறேன். விரைவில் நேரில் சென்று ஆய்வு நடத்துவேன். ஜனநாயகத்தின் மூன்றாவது கண்ணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் ஆதரவோடு, கல்வித்துறையில் எங்கு எங்கு சீர்திருத்தங்கள் தேவையோ, அங்கெல்லாம் நிச்சயம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்." என்றார்.

சட்டம் ஒழுங்கு: ``இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?" - தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டது சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக. அதைத் தொடர்ந்து, 60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சியில் இருந்த திம... மேலும் பார்க்க

`மின் தடை பிரச்னைகளுக்குக் காரணம் இதுதான்..!' - அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதென்ன?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் சோலார், விண்ட் பவர் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள், வெண... மேலும் பார்க்க

'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' - தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி மக்களுக்கு 'குக்கர்' பரிசு வழங்கி உற்சாகமூட்டியி... மேலும் பார்க்க

'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு - விவரம் என்ன?

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.சி.வி அணிதவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அதிமுகவுக... மேலும் பார்க்க

வேலூர்: செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டதாகப் புகார்; தவெக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து போராட்டம்

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொட... மேலும் பார்க்க