செய்திகள் :

சட்டம் ஒழுங்கு: ``இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?" - தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டது சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக. அதைத் தொடர்ந்து, 60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளைவிட கூதல் இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. 118 இடங்கள் ஆட்சி அமைக்க தேவையாக இருந்த நிலையில், திமுக-வுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரியணையில் அமர்ந்தார் தவெக தலைவர் விஜய்.

தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம், பதவியேற்பு என பரபரப்பானது தமிழ்நாடு. இதற்கிடையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம். சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது. முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்! “முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,`` கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப்பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.

சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.

நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறார்..

மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அமைச்சர் பி.விஸ்வநாதன்

தமிழ்நாட்டின் புதிய உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பி.விஸ்வநாதன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேகதாது அணை விவகாரம், ஆளுநர் உடனான உறவு... மேலும் பார்க்க

`மின் தடை பிரச்னைகளுக்குக் காரணம் இதுதான்..!' - அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதென்ன?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் சோலார், விண்ட் பவர் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள், வெண... மேலும் பார்க்க

'குக்கர் பரிசு, அறுசுவை விருந்து' - தொகுதி மக்களை 'வெயிட்டாக' கவனித்த அமைச்சர் ஆனந்த்!

தி.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதியின் எம்.எல்.ஏவும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொகுதி மக்களுக்கு 'குக்கர்' பரிசு வழங்கி உற்சாகமூட்டியி... மேலும் பார்க்க

'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு - விவரம் என்ன?

அதிமுக இரு பிளவாக பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.சி.வி அணிதவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அதிமுகவுக... மேலும் பார்க்க

வேலூர்: செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டதாகப் புகார்; தவெக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து போராட்டம்

வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொட... மேலும் பார்க்க