'அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!' - யார் யார்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப...
மகளின் அறிமுக படத்தை ஹிட்டாக்க ஷாருக் கான் திட்டம்; கிங் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கும் ரன்வீர்
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது மகள் சுஹானா கானை `கிங்' என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் ஷாருக் கான் கெளரவ வேடத்தில் மட்டும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது படத்தின் முழு கதையையும் ஷாருக் கான் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். படத்தில் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, சுஹானா கான், அர்ஷத் வார்சி, அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மேலும் ஒரு நடிகர் கெளரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது மகள் நடிக்கும் படம் பெரிய அளவில் ஹிட்டாக வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்ட இயக்குநரை நீக்கிவிட்டு, இயக்குநர் ஆனந்தை ஷாருக் கான் நியமித்து இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூலைக் கொடுத்த துரந்தர் 2 படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு மர்மமான கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரன்வீர் சிங் ஒரு ரகசிய கடிதத்தை சுஹானாவிடம் ஒப்படைக்கிறார், அது வில்லன்களிடமிருந்து தப்பித்து அடுத்த பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல சுஹானாவிற்கு உதவுகிறது.
இப்படத்தில் ரன்வீர் சிங்கின் கெளரவ தோற்றம் குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், சில வாரங்களுக்கு முன்பு, கிங் படப்பிடிப்பில் ஒருவர் ஒரு குழந்தையுடன் நிற்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலானது. நெட்டிசன்கள் அதில் இடம் பெற்று இருப்பது ரன்வீர் சிங் மற்றும் அவரது மகள் துவாவின் படம் என்று கூறினர். எனவே ரன்வீர் சிங் கிங் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கெனவே கிங் படத்தில் ரன்வீர் சிங் மனைவி நடிகை தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இதனால் அவரது கணவர் ரன்வீர் சிங் வீட்டில் இருந்து தனது மகளை கவனித்து வருகிறார்.
சமீபத்தில் தீபிகா படுகோன் தான் இரண்டாவது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். வயிற்றில் குழந்தையோடு சமீபத்தில் விளம்பரம் ஒன்றிலும் தீபிகா நடித்தார். கிங் படம் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

















