செய்திகள் :

விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டி இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதாகும் இவர் மர வேலைகளைச் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை அழைத்து, அருகிலுள்ள கடையில் வடை வாங்கி வருமாறு கூறியிருக்கிறார்.

முதியவர் தெரிந்தவர் என்பதாலும், அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதாலும், சிறுமியும் கடைக்குச் சென்று வடையை வாங்கி வந்திருக்கிறார். அப்போது சிறுமிக்கு ஒரு வடையைக் கொடுத்து அருகில் அமர வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் முதியவர் கன்னியப்பன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட முதியவர் கன்னியப்பன்
கைது செய்யப்பட்ட முதியவர் கன்னியப்பன்

அதையடுத்து அங்கிருந்து அழுதுகொண்டே ஓடிய சிறுமி, முதியவரின் பாலியல் தொல்லை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில் முதியவர் கன்னியப்பனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாம.க தலைவர் அன்புமணி, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை; ஒரு மாதம் காத்திருந்து வெட்டி கொன்ற கும்பல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்ற... மேலும் பார்க்க

பழனி: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசெஜ்; எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப்பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாள்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னை குறித்துப் புகார் அளிப்பதற்காக காவல் நிலை... மேலும் பார்க்க

வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் - திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் - சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் ... மேலும் பார்க்க

"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்

கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆக... மேலும் பார்க்க

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நி... மேலும் பார்க்க