செய்திகள் :

பழனி: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசெஜ்; எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

post image

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாள்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னை குறித்துப் புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்ட எஸ்.ஐ ராஜகோபால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், அலைபேசி குறுஞ்செய்தி மூலமாகப் பெண்ணிற்குத் தொடர்ந்து ஆபாசமான முறையில் மெசேஜ்களை அனுப்பி அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் அதிகாரி ராஜகோபாலின் அநாகரிகச் செயல் குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து உயர் காவல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வழியாக ஆபாசமாக மெசேஜ் அனுப்பி அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது.

பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர்
பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர்

பாதுகாப்பு தேடி வரும் பொதுமக்களிடம், அதுவும் பெண்ணிடம் காவல் அதிகாரியே இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை; ஒரு மாதம் காத்திருந்து வெட்டி கொன்ற கும்பல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்ற... மேலும் பார்க்க

வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் - திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் - சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் ... மேலும் பார்க்க

"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்

கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆக... மேலும் பார்க்க

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நி... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில... மேலும் பார்க்க