மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - ...
KKR vs DC: "இந்த சீசனில் ஹைதராபாத் அணி மிகவும் வலிமையானதாக தெரிகிறது!"- டெல்லி கேப்டன் அக்சர் படேல்
ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் நேற்று (மே24) மோதின.
இந்த கடைசி போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஒரு ஆறுதல் வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் தொடரை முடித்துள்ளது டெல்லி அணி.
போட்டிக்கு பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், "கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு பெருமை அளிக்கிறது.

சூழ்நிலைகள் எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், அணி கடைசி வரை போராடியது. பலர் நாங்கள் எளிதில் கைவிட்டுவிடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால் வீரர்கள் அதனை செய்யவில்லை.
இந்த சீசனில் நாங்கள் செய்த தவறுகளை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகே எதை மேம்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒரே ஒரு போட்டி மட்டும் வேறு விதமாக முடிந்திருந்தால், இன்று நம்மைப் பற்றிய பேச்சே மாறியிருக்கும். முக்கியமான நேரங்களில் கேட்ச்களை தவறவிட்டது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
கேப்டனாக இந்த ஐபிஎல் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது. அணியில் உள்ள ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்வது முக்கியம். ஆனால் முதலில் நம்முடைய மனநிலை சரியாக இருக்க வேண்டும்.
மனம் அமைதியாக இல்லையெனில் தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். அதனால் நான் எப்போதும் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். மன அழுத்தம் வந்தால் முதலில் என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்கிறேன்.

நான் அமைதியாக இருந்தால்தான் மற்றவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்க முடியும். இந்த சீசனில் தகுதி பெற்ற அணிகளில் ஹைதராபாத் அணி மிகவும் வலிமையானதாக தெரிகிறது.
அவர்களின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்துவிட்டால், அந்த அணியை தடுப்பது மிகவும் கடினம்.”என்று பேசியிருந்தார்.
















