செய்திகள் :

'கிரிக்கெட் தான் என் வாழ்க்கை, ஆனால்.!' - ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர்

post image

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பரிமாணங்களிலும் அசத்தக்கூடியவர் என்பதால் '3D கிரிக்கெட்டர்' என்று அழைக்கப்பட்டார்.

தற்போது அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், " கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. நான் 10 வயதில் விளையாடத் தொடங்கினேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடியதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எப்போதும் எனது பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக இருக்கும். நான் விரும்பியதைச் செய்ய என்னை அனுமதித்ததற்கு 'நன்றி' என்ற வார்த்தை மட்டும் போதாது. என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

பல கற்றல்கள், எண்ணற்ற நினைவுகள் மற்றும் பல்வேறு உத்வேகங்களுக்காக பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது நன்றிகள்.

நாக்பூரில் இந்தியாவின் 500-வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசியதும், 2019 உலகக் கோப்பையில் எனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் நான் எப்போதும் நெஞ்சில் சுமந்து நிற்கும் தருணங்கள்.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

எனது ஐபிஎல் அணிகளான குஜராத், ஹைதராபாத், சிஎஸ்கே மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு எனது சிறப்பு நன்றிகள். அனைத்து இடங்களிலிருந்தும் கிடைத்த அனுபவங்களும் பாடங்களும் தான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் இங்குதான் கழித்தேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உதவிய அனைவருக்கும் நன்றி. மிகவும் சிறப்பான அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பைகளையும் வென்றுள்ளேன்.

ஏராளமான தடைகளும் சவால்களும் என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வடிவமைத்தன. இன்ப துன்பங்கள் நிறைந்த அனைத்து சூழ்நிலைகளிலும் என்னுடன் உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள். நான் நம்பமுடியாத அளவிற்கு வெறுப்பையும் எதிர்மறையையும் எதிர்கொண்டுள்ளேன்.

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

அவற்றை நான் புறக்கணித்துவிட்டு முன்னோக்கிச் சென்றேன். நேர்மறையாகச் சிந்தித்து கடினமாக உழையுங்கள். கிரிக்கெட் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துள்ளது. கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. என்றென்றும் நன்றியுடன் உங்கள் 3D வீரர் விஜய் சங்கர்..." என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

'Keep the body guessing': கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்?

ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்பட... மேலும் பார்க்க

GT vs CSK: "சென்னை, பெங்களூரு அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம்; ஆனால்..." - சுப்மன் கில்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது மு... மேலும் பார்க்க

GT vs CSK: "அவர் அணியில் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான்" - யாரைச் சொல்கிறார் ருதுராஜ்?

ஐபிஎல் தொடரின் தனது கடைசி போட்டியை குஜராத்திற்கு எதிராக விளையாடிய சென்னை அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் செல்லாமல் தொடரை முடிக்கிறது. இப்போட்டிக்குப் பின்ன... மேலும் பார்க்க

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' - வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்

தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்... மேலும் பார்க்க

CSK: `கேப்டன்சியில் தடுமாறும் ருதுராஜ்; அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன்.!' - முன்மொழிந்த மனோஜ் திவாரி

ஐபிஎல் தொடரில் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய மாற்றம் வரலாம் என்ற பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் நான்கு இடங... மேலும் பார்க்க

CSK: 'அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும்; ஆனால் ருதுராஜ் தனது வேலையை.!'- பிளெமிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-18) ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்... மேலும் பார்க்க