செய்திகள் :

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

post image

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
முதல்வர் விஜய் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேற்கு மண்டலத்தில் தொடங்கி தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டில் பாதியைப் பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது.

தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

தென்காசி: காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ். 68 வயது நிரம்பிய விவசாயியான அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் நிதி உதவியுடன் வீடு கட்டி வருகிறார். அந... மேலும் பார்க்க

"பின்வாசல் வழியாக பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று (மே. 25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். விசிக குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் குறித்... மேலும் பார்க்க

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'வீர வசனம் என்ன ஆனது?'- முதல்வர் விஜய்க்கு டிடிவி கேள்வி

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் ம... மேலும் பார்க்க

செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்தது ஏ.ஐ. வீடியோவா? – நடந்தது என்ன?

கோவையில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பந்தய சாலை பகுதியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யபார... மேலும் பார்க்க

ரூ.500 ஓய்வூதியத்திற்காக மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்! - சத்தீஷ்கர் அவலம்

சத்தீஷ்கர் மாநிலத்தில், மாநில அரசு முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையை பெற வங்கிகள் பல நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள சுர்குஜா ம... மேலும் பார்க்க

'இந்தியா என்னை 100% நம்பலாம்; நான் மோடியின் மிகப்பெரிய ஃபேன்!' - சர்ப்ரைஸ் போன்காலில் ட்ரம்ப்

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் இந்தியப் பயணத்தில் இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில், 'அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை' கொண்டாடும் நிகழ்ச்சி ஒன... மேலும் பார்க்க