செய்திகள் :

'இந்தியா என்னை 100% நம்பலாம்; நான் மோடியின் மிகப்பெரிய ஃபேன்!' - சர்ப்ரைஸ் போன்காலில் ட்ரம்ப்

post image

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் இந்தியப் பயணத்தில் இருக்கிறார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில், 'அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை' கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்ப்ரைஸாக போன்காலில் கலந்துகொண்டார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவின் இந்திய தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் அந்த நிகழ்ச்சியில் Live போன்காலில் பேசியதாவது...

"இந்தியாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். அவர் என்னுடைய நல்ல நண்பர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

செர்ஜியோ ஒரு அற்புதமான மனிதர். இந்தியாவுடன் நாம் இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்ததே இல்லை.

இந்தியாவும், இந்திய மக்களும் என்னையும், எங்களது நாட்டையும் 100 சதவிகிதம் நம்பலாம். அவர்களுக்கு எப்போது, என்ன உதவி தேவையென்றாலும் யாரை அழைக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நேராக இங்கே எங்களை அழைக்கலாம். நாங்களும் இப்போது மிகச்சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதிய சாதனைகளைப் படைத்து வருகிறோம்.

நம்முடைய பொருளாதாரம், பங்குச்சந்தை என எல்லாமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுக்கு என்ன தேவையென்றாலும், எங்களிடம் கேட்கலாம். சொல்லப்போனால் நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஃபேன்.

மார்கோ ஒரு மிகச்சிறந்த மனிதர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறந்த வெளியுறவுத்துறைச் செயலாளராக அவர் பேசப்படுவார். மார்கோ நம்முடன் இருக்கும்போது, நமக்கு எல்லாமே பிரம்மாண்டமாகத்தான் நடக்கும்". என்றிருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்தது ஏ.ஐ. வீடியோவா? – நடந்தது என்ன?

கோவையில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பந்தய சாலை பகுதியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யபார... மேலும் பார்க்க

ரூ.500 ஓய்வூதியத்திற்காக மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்! - சத்தீஷ்கர் அவலம்

சத்தீஷ்கர் மாநிலத்தில், மாநில அரசு முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையை பெற வங்கிகள் பல நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள சுர்குஜா ம... மேலும் பார்க்க

'நோ' கொத்துக் கொத்தாகப் பணம்; 'நோ' அணு ஆயுதத் தயாரிப்பு! - ட்ரம்ப் சொல்லும் ஒப்பந்தத்தின் Outline

'ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது' என்று நேற்று முன்தினம் உலக நாடுகளுக்கு 'குட் நியூஸ்' கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஈரானும் தங்களிடம் இருக்கும் செறிவூட்டப்ப... மேலும் பார்க்க

"பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியே இந்த ஆட்சி.."- விஜய்யைச் சாடும் இபிஎஸ்

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்..."விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளா... மேலும் பார்க்க

"கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா முதல்வர்களாக நடித்துள்ளேன்; ஆனால்..." - வி.டி.சதீசனை வாழ்த்திய மம்மூட்டி

கேரள ​முதலமைச்சர் வி.டி.சதீசனுக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் கொச்சி பொதுமக்கள் நேற்று பாராட்டு விழா நடத்தினர். கடவந்தறா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அர... மேலும் பார்க்க