செய்திகள் :

Doctor Vikatan: முடி உதிர்வை நிறுத்தி, வளரச் செய்யுமா பயோட்டின் மாத்திரை?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அதிகமான முடி உதிர்வு இருக்கிறது. என்னுடைய தோழி என்னை பயோட்டின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படியும்,

அது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, வளரச் செய்யும் என்றும் சொல்கிறாள். அது உண்மையா... எத்தனை நாள்களுக்கு, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பயோட்டின் என்பது வைட்டமின்களில் மிக முக்கியமானது. இதனை வைட்டமின் B7 (Vitamin B7) என்றும் சொல்வோம். பொதுவாக பயோட்டின் என்றாலே பலரும் அதனை தலைமுடி மற்றும் நகங்களோடுதான் (Hair and Nails) தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள்.

ஆனால், பயோட்டின் நம் உடலில் நாம் உட்கொள்ளும் புரதம் (Protein) மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை (Carbohydrates) செரிமானம் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறது.

பயோட்டின் என்பது உடலில் கெரட்டின் (Keratin) உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கெரட்டின் என்பது நம்முடைய தலைமுடி, நகங்கள் போன்றவற்றில் இருக்கக்கூடிய  முக்கியமான புரத  காரணியாகும். இதனால்தான் பயோட்டின் எப்போதும் முடி வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

பயோட்டின் சப்ளிமென்ட்ஸ் எடுத்தால் முடி வளருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பயோட்டின் குறைபாடு (Biotin Deficiency) உள்ளவர்கள் இதனை சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளும்போது, அது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக, நகங்கள் எளிதில் உடையக்கூடிய பிரச்னை மற்றும் தலைமுடி மெலிதாகும் பிரச்னை (Hair Thinning) உள்ளவர்களுக்கு இது நிச்சயம் உதவும்.

தலைமுடி மெலிதாவதற்கும், உதிர்வதற்கும் ஹார்மோன் குறைபாடுகள் (Hormonal issues) உள்ளிட்ட வேறு சில காரணங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன.

பொதுவாகவே தலைமுடி மெலிதாவதற்கும், உதிர்வதற்கும் ஹார்மோன் குறைபாடுகள் (Hormonal issues) உள்ளிட்ட வேறு சில காரணங்கள்தான் முக்கியமாக இருக்கின்றன. எனவே, அந்தப் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்த பிறகு, பயோட்டின் குறைபாடும் இருந்தால் மட்டுமே இந்த சப்ளிமென்ட்ஸ் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

உண்மையில், மனிதர்களுக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படுவது என்பது மிகமிக அரிதான ஒரு விஷயம். அதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, பயோட்டின் குறைபாடு இல்லாத பட்சத்தில், அதைத் தனியாக சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்தப் பலனும் இல்லை. அதற்கு பதிலாக முடி கொட்டுவதற்கான மற்ற காரணங்களைக் கண்டுபிடித்து சரிசெய்யலாம்.  

இது நகங்களின் ஆரோக்கியத்திற்கு (Nails Health) நல்ல பலனைத் தரும்.

சாதாரணமாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 50 மைக்ரோகிராம் (32 to 50 mcg) பயோட்டின் தேவைப்படும். ஆனால், உடலில் பயோட்டின் குறைபாடு (Deficiency) தீவிரமாக இருந்து, அது உடலில் சரியாக உறிஞ்சப்பட வேண்டும் (Absorption) என்பதற்காக மருத்துவர்கள் சில நேரங்களில் 500 மைக்ரோகிராம் (500 mcg) வரை கூட பரிந்துரைப்பதுண்டு.

பயோட்டின் குறைபாடு இல்லாத நிலையிலும் கூட, சிலர் இதனைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு காரணம் இது நகங்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனைத் தரும் என்பதுதான். எனினும், தேவையற்ற பட்சத்தில் இதனை சும்மா எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: யாரையும் தாக்கும் புற்றுநோய்... முன்கூட்டியே தெரிந்துகொள்ள டெஸ்ட் இருக்கிறதா?

Doctor Vikatan:இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்றே கணிக்க முடிவதில்லை. ஒருவருக்குப் புற்றுநோய் வருமா என்பதைத் தெரிந்துகொள்ள ஏதேனும் டெஸ்ட் இருக்கிறதா? அதை எத்தனை நாள்களுக்கொரு முறை செய்யலாம்?பதில் ச... மேலும் பார்க்க

ஒரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - லைபீரியா பெண்ணின் 3 நோய்களை வீழ்த்திய இந்திய மருத்துவர்கள்!

மருத்துவ உலகம் வியந்து பார்க்கும் ஒரு அசாத்திய சாதனை இந்தியாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.லைபீரியா நாட்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பல வருடங்களாகப் பார்க்கும் தையல் வேலை... அடி வயிற்று வலிக்குக் காரணமாகுமா?

Doctor Vikatan:நான் 10 வருடங்களாக டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதுதான் எங்கள் குடும்பத்துக்கான பிரதான வருமானம். என் வயது 55. சமீப காலமாக தையல் மெஷினில் தைக்கும்போது எனக்கு அடி வயிறு வலிக்கிறது. தை... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் - விறுவிறு கோடைகால வியாபாரம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப... மேலும் பார்க்க

வெப்ப அலை, ஏசி வாழ்க்கை... கோடையில் கண்களுக்கு இரட்டை ஆபத்து!

கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் வெப்பந... மேலும் பார்க்க

Ebola: காய்ச்சல் இருக்கிறதா? காங்கோ, உகாண்டா, சூடானில் இருந்து வருபவர்களுக்கு இந்திய அரசு அட்வைஸ்!

Ebola வைரஸ் பரவல் தற்போது உலகின் தலைவலியாக மாறியுள்ளது.காங்கோ, உகாண்டா, தென் சூடான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக எபோலா வைரஸ் பரவி வருவதால், அந்த நாடுகளில் இருந்து வரும் இந்திய மக்கள் அல்லது பயணிகளுக்கு ப... மேலும் பார்க்க