செய்திகள் :

Doctor Vikatan: பல வருடங்களாகப் பார்க்கும் தையல் வேலை... அடி வயிற்று வலிக்குக் காரணமாகுமா?

post image

Doctor Vikatan: நான் 10 வருடங்களாக டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதுதான் எங்கள் குடும்பத்துக்கான பிரதான வருமானம். என் வயது 55. சமீப காலமாக தையல் மெஷினில் தைக்கும்போது எனக்கு அடி வயிறு வலிக்கிறது.  தையல் வேலையைத் தொடர்ந்து செய்தால் இதுபோன்ற பிரச்னை வரும் என்றும் அதை நிறுத்துமாறும் சிலர் சொல்கிறார்கள். தையல் வேலைக்கும் அடிவயிற்று வலிக்கும் தொடர்பு உண்டா? அல்லது இதற்கு வேறு காரணங்கள் இருக்குமா?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மருத்துவர் ஸ்ரீதேவி

55 வயதில் அடிவயிற்றில் வலி வருவதற்கு நீங்கள் பார்க்கும் தையல் வேலை மட்டும் காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கால்களால் தையல் மெஷினை மிதித்துக்கொண்டே இருப்பது, குனிந்து வேலை பார்ப்பது போன்றவற்றால் சில பெண்களுக்கு இடுப்பு வலியும், கீழ்வயிற்றுப் பகுதித் தசைகளில் அழுத்தமும், இடுப்பு மற்றும் முதுகுவலியும் வரலாம். அதிகமாக வேலை செய்யும் நாள்களில் இவற்றை நீங்கள் உணரலாம்.

தையல் வேலை செய்வதால் கர்ப்பப்பையில் பிரச்னைகள் வரும் என நினைத்து பயப்படத் தேவையில்லை. 50 ப்ளஸ் வயதில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் காரணமாகவும் அடிவயிற்று வலி வரலாம். சிலருக்கு சிறுநீர்ப்பாதை தொற்றும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். கர்ப்பப்பையில் உள்ள ஃபைப்ராய்டு கட்டிகள் அல்லது சினைப்பை கட்டிகள் காரணமாகவும் அடி வயிற்றில் வலி வரலாம். மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு இப்படி வலி வரலாம். இடுப்பெலும்பு, மூட்டு மற்றும் தசை வலிகளின் காரணமாகவும் இருக்கலாம்.

குடல் சார்ந்த பிரச்னைகள், மலச்சிக்கல், சரியாக செரிமானமாகாதது போன்ற பல காரணங்களால் அடி வயிற்றில் வலி வரலாம். 

பெல்விக் எக்ஸாம் எனப்படும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சோதனை, ஸ்கேன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் தேவைப்படும்.

வலி அதிகரித்துக்கொண்டே இருந்தாலோ, தொடர்ச்சியாக இருந்தாலோ, வெள்ளைப்படுதல் இருந்தாலோ, ரத்தப் போக்கு இருந்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலோ, உடல் எடை குறைந்தாலோ, கூடினாலோ, வயிறு மிகவும் வீக்கமாகத் தெரிந்தாலோ, நடக்கும்போதோ, எடை தூக்கும்போதோ அதிகமாக வலித்தாலோ... நீங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெல்விக் எக்ஸாம் எனப்படும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சோதனை, ஸ்கேன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் தேவைப்படும்.  இந்தப் பரிசோதனைகளின் மூலம், வலிக்கான காரணம் தெரியும். சாதாரண தசைப் பிடிப்பா அல்லது வேறு காரணங்களா எனத் தெரிந்து சரியான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.  வேலை முறையில் சில மாற்றங்களைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கொரு முறையும் எழுந்து நடக்கலாம். முதுகுப் பகுதிக்கு சரியான சப்போர்ட் உள்ளபடி உட்கார வேண்டும்.  தொடர்ந்து நீண்ட நேரம் தையல் மெஷினை மிதிக்காமல், இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். இடுப்பெலும்புத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் - விறுவிறு கோடைகால வியாபாரம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப... மேலும் பார்க்க

வெப்ப அலை, ஏசி வாழ்க்கை... கோடையில் கண்களுக்கு இரட்டை ஆபத்து!

கடந்த சில நாள்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, சில இடங்களில் வெப்ப அலையும் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர், திருத்தணி, கரூர் போன்ற பகுதிகளில் வெப்பந... மேலும் பார்க்க

Ebola: காய்ச்சல் இருக்கிறதா? காங்கோ, உகாண்டா, சூடானில் இருந்து வருபவர்களுக்கு இந்திய அரசு அட்வைஸ்!

Ebola வைரஸ் பரவல் தற்போது உலகின் தலைவலியாக மாறியுள்ளது.காங்கோ, உகாண்டா, தென் சூடான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக எபோலா வைரஸ் பரவி வருவதால், அந்த நாடுகளில் இருந்து வரும் இந்திய மக்கள் அல்லது பயணிகளுக்கு ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா... எடை குறையுமா?

Doctor Vikatan: ஜிம் செல்பவர்கள் மற்றும் பாடிபில்டிங் செய்பவர்களிடையே உடலை விரைவாகக் கட்டமைக்க அனபாலிக் ஸ்டீராய்டு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக மருத்துவ எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன. மர... மேலும் பார்க்க

Doctor Vikatan: செக்கு எண்ணெய் வாங்க வசதியில்லை; ரேஷன் பாமாயில் பயன்படுத்தினால் இதயநோய் வருமா?

Doctor Vikatan: நான் ஓர் இல்லத்தரசி. ரேஷன் கடையில் தரும் பாமாயில் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைத்து வருகிறேன். செக்கு எண்ணெய் வாங்க வசதி இல்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் இதய ... மேலும் பார்க்க

Doctor Vikatan: 2 வாரங்கள் வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது. ப்ரீ டயாபட்டிக் நிலையில் உள்ளவர்கள் வெறும் இரு வார ஓய்வு எடுத்தாலே, அதாவது நடைப்பயிற்சி செய்யாமலே அது முழு அளவிலானசர்க்கரை நோயாக மாறிவிடும் ... மேலும் பார்க்க