செய்திகள் :

"ஏற்கனவே நிறைய அனுபவித்துவிட்டேன்" ராசியில்லை என ஒதுக்கிய 13-ம் நம்பர் காரை கேட்டு வாங்கிய அமைச்சர்!

post image

எம்

கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்ற பின்னர் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு, அவர்களுக்கான பங்களா மற்ரும் கார் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சி.பி.எம் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்த பி. பிரசாத் 13 ஆம் எண் காரைப் பயன்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 13-ம் எண் கார் ராசி இல்லை எனக்கூறி அமைச்சர்கள் யாரும் அந்த காரை பயன்படுத்தாமல் புறக்கணித்தனர். அதுபோன்றே இந்த முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததும் 13-ம் நம்பர் காரை ஏற்றுக்கொள்ள அமைச்சர்கள் யாரும் முன்வராமல் இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி 13-ம் நம்பர் காரை கேட்டுப்பெற்றுக்கொண்டார். இதுபற்றி கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி கூறுகையில், "13-ம் எண் காரை பயன்படுத்தினால் கஷ்டங்கள் வரும் என்று கூறப்படும் மூடநம்பிக்கைகளில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.13-ம் நம்பர் சாதாரண எண். யாருக்கும் அந்த எண் வேண்டாம் என்று காரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 13-ம் எண் காரை பயன்படுத்தாமல் இருந்தார்களா எனவும் எனக்கு தெரியாது. ஆனால், அதற்காக அந்த எண்ணை மோசமான ஒன்றாக ஒதுக்கக் கூடாது அல்லவா? அதனால் நான் அதை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன்.

கே.எம்.ஷாஜி

இப்போது தற்காலிகமாக எனக்கு 9 ஆம் எண் கார் ஒதுக்கப்பட்டுள்ளது. 9-ம் எண்ணாக இருந்தாலும் 13-ம் எண்ணாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். 13-ம் எண்ணை எடுத்தால் ஏதாவது கஷ்டங்கள் வரும் என்றுதானே நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டன. இனி வருவதற்கு கஷ்டங்கள் ஒன்றும் இல்லை. நான் ஏற்கனவே நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன். அப்போதெல்லாம் என் கையில் 13-ம் எண் இல்லையே. நான் இரண்டு முறை தேர்தலில் தோற்றபோதும் என்னிடம் 13-ம் எண் இருக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களில் எனக்குப் பொதுவாகவே நம்பிக்கை கிடையாது.

கேரள அமைச்சர் கே.எம்.ஷாஜி

அந்த எண்ணுள்ள காரில் சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் விபத்துகள் நடக்கலாம். அப்படி ஏதேனும் விபத்து நடந்தால், சிலர் '13 ஆம் எண் காரை எடுத்ததால் தான் இப்படி நடந்தது' என்று கூறுவார்கள். ஆனால், அதில் எனக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ பெரிய புரட்சியாளனாகக் காட்டிக் கொள்வதற்காக நான் இந்த எண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை" என்றார்.

"கேரளா துபாயிலா இருக்கிறது?"கனிமவள லாரிகளை அனுமதிக்க கோரிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து ஆஸ்டி... மேலும் பார்க்க

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது ந... மேலும் பார்க்க

’சமூகநீதி பேசும் ஆ.ராசா பெண்ணை பொருளாக, கூட்டணி கட்சிகளை அடிமைகளாக பார்க்கிறார்’ - காங்கிரஸ் சாடல்

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்ணை இழிவுபடுத்தும் சொல் பேசும் வாய், பண்பாட்டைப் பேச தகுதியற்ற வாய் என்று தமிழின் மரபே சொல்லும். ஆ.ராசா அவர்கள் தொடர்ச்ச... மேலும் பார்க்க

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்' வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான... மேலும் பார்க்க

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இ... மேலும் பார்க்க

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க