செய்திகள் :

கோவை: காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

post image

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் திடீரென காணாமல் போன அச்சிறுமி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையி்ல், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

அடையாளம் தெரியாத நபர்கள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து உடற்கூராய்வு முடிவிலேயே உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சிறுமியின் உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி - கிருஷ்ணகிரி பரபரப்பு!

காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றும் பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து ... மேலும் பார்க்க

`30 சவரன் நகை... 12 வருஷமா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டே இருக்கேன்!' - முதுகுளத்தூர் இளையராஜா

முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா.'ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள் கசிவில் கைதான ஆசிரியர்! - ரூ.1500 கோடி கோச்சிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் மீ... மேலும் பார்க்க

டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும... மேலும் பார்க்க

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் - எஸ்கேப்பான ஏ பிளஸ்... தொடரும் நடவடிக்கை!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: அடிக்கடி சண்டை; மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்!

ராணிப்பேட்டை காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). பெயின்ட்டர் தொழிலாளி. இவரின் மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந... மேலும் பார்க்க