செய்திகள் :

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

post image

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் முதலில் அறிமுகமானார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சர்மாவின் தற்கொலை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்மாவின் கணவர் சமர்த்சிங் ஒரு வாரமாகத் தலைமறைவாக இருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சர்மா கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டி, உடலை இரண்டாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு இந்தப் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் தற்போது கைது செய்யபட்ட சர்மாவின் கணவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கணவருடன் த்விஷா
கணவருடன் த்விஷா

கோர்ட் சர்மாவின் கணவர் சமர்த் சிங்கிடம் 7 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், ​​சமர்த் சிங் போலிஸாரிடம், கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, த்விஷா சர்மா தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகவும், இல்லற வாழ்க்கையை வாழ முடியாது என்றும் கூறினார்.

அவர் அன்று மாலை டெல்லிக்கு விமானத்தில் சென்று நொய்டா வீட்டிற்குச் சென்றார். பலமுறை வற்புறுத்தலுக்குப் பிறகு, அவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் ஏப்ரல் 23 அன்று போபாலுக்குத் திரும்பினார் என்று குறிப்பிட்டார்.

மேலும் சமர்த் சிங் ஏற்கனவே ஏப்ரல் 24 ஆம் தேதி பெங்களூருக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாகவும், த்விஷா ஷர்மா ஆரம்பத்தில் அவருடன் வர தயாராக இருப்பதாகவும் கூறினார். பின்னர், த்விஷா சர்மா பெங்களூரு வர மறுத்ததாகவும், அஜ்மீரில் உள்ள தனது சகோதரரிடம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் சமர்த் சிங் கூறியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு த்விஷா சர்மா அடிக்கடி தனது தாயாருக்கு மெசேஜ் மூலம் தன்னை வந்து அழைத்து செல்லும்படி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், ''அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் அறைக்குள் நுழைந்தார்.

உடனே த்விஷா சர்மா போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள பல முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. இது தவிர சமர்த் சிங் அல்லது அவரது தாயாரும் போனை எடுத்து பேசவில்லை. பல மணி நேரத்திற்குப் பிறகு சமர்த் சிங் தாயார் கிரிபாலா சிங் போன் மூலம் எங்கள் தாயாரிடம் த்விஷா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி த்விஷா ஷர்மாவின் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்ட பிறகு, அவரது கணவர் சமர்த் சிங், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் தந்தையைப் பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியது த்விஷாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை செய்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது சமர்த் சிங் வாக்குமூலத்தில் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏழு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சமர்த் சிங், சுமார் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னதாக ஜபல்பூரில் சரணடைவதற்காகச் சென்ற அவர், அங்கு சரணடைவதற்கு முன்பே கைது செய்யப்பட்டு போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மறுநாளே இந்த விசாரணை நடைபெற்றது. சர்மா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நாளிலிருந்து சமர்த் சிங் தலைமறைவாக இருந்து வந்தார்.

suicide
suicide

இதற்கிடையில், அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதியான அவரது தாயார் கிரிபாலா சிங் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த போதிலும், தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணையில் போலீஸ் அறிவிப்புகளைப் புறக்கணித்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நி... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில... மேலும் பார்க்க

'பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!' - பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், 'நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை: தாசில்தார் காருக்கு தீ வைப்பு; நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவெனப் பரவிய பிறகே... மேலும் பார்க்க

"கோவை சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை" - ஐ.ஜி ரம்ய பாரதி அதிர்ச்சித் தகவல்

கோவை சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்ய பாரதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்ப... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: சாக்லேட் தந்து சிறுமியை அழைத்து சென்று கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க