செய்திகள் :

"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்

post image

கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மகளின் உடலைத் தன்னிடம் காட்டாமல் எரித்து விட்டதாக கணவர் மீது சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “எனது குழந்தையின் மரணத்தில் உள்ள உண்மைகளைக் கண்டறிய எதிர்காலத்தில் உடலைத் தோண்டி எடுத்து பரிசோதிக்க வேண்டிய தேவை வரலாம் என்பதால், உடலைப் புதைத்திருக்க வேண்டும்.

ஆனால், உடற்கூராய்விற்குப் பிறகு மகளின் உடலை என்னிடம் காட்டவில்லை. முதலமைச்சரிடம் இருந்து முறையான நீதி மற்றும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பற்றிய உறுதி கிடைக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் குழந்தையின் தந்தையை மட்டும் தனியாக அழைத்து சென்று அவரிடம் கையெழுத்து வாங்கி உடலை அவசர அவசரமாக எடுத்து சென்று எரித்து விட்டனர்.

கார்த்தி, மோகன்
கார்த்தி, மோகன்

தாயின் மதுப்பழக்கம் மற்றும் கவனக்குறைவு தான் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய். நீதி கேட்டு போராடியதால் என் மீது பழிபோட்டு திசை திருப்ப பார்க்கின்றனர். 

பல ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையை இப்போது எனக்கு எதிராக திசை திருப்புகிறார்கள். கைது செய்யப்பட்ட கார்த்தியின் இரண்டாவது மனைவி எனக்கூறப்படும் பெண்ணுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

அவர் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். குழந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை தர வேண்டும்” என்றார்.

வரதட்சணை கொடுமை: தாய், சகோதரர் முன்னிலையில் ஆசிட் குடித்த பெண் - திருமணம் முடிந்த ஓராண்டில் சோகம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் - சபியா தம்பதியரின் மகள் பாத்திமத் சுபைதா(24). பாத்திமத் சுபைதாவும் செங்களா பகுதியைச் சேர்ந்த ஆதில்(27) என்பவரை காதலித்து பெற்றோர் ... மேலும் பார்க்க

'வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?' - தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவன் வாக்குவாதமா?

போபாலைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற பெண் கடந்த 12ம் தேதி தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். புனே முன்னாள் அழகியான த்விஷா ஒரு எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் தனது கணவனுடன் சமூக வலைத்தளம் மூலம் ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு லாரியில் நேர்ந்த பாலியல் அத்துமீறல் - கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி தனது தாயுடன், வந்தவாசி பகுதியிலுள்ள தர்காவுக்குச் சென்றுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடன் தர்காவிலேயே தங்கினார். இந்த நி... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை?- உயிரிழந்த மாணவி; - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு - கலைச்செல்வி ஆகியோரது மகள் சீதாலட்சுமி(வயது:19). இவர், திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு செவிலியர் கல்லூரியில... மேலும் பார்க்க

'பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!' - பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், 'நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை: தாசில்தார் காருக்கு தீ வைப்பு; நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவெனப் பரவிய பிறகே... மேலும் பார்க்க