செய்திகள் :

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு | 77-வது நாளில் தீர்ப்பு

post image

தூத்துக்குடியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள கண்மாய் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நிலையில் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், மறுநாள் 12-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர், ராமநாதபுரத்த்கைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், " இங்கு தனக்கு பாதுகாப்பு இல்லை, வேறு சிறைக்கு மாற்றுங்கள்" என சிறைக் காவலர்களிடம் கூறியதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுப்படி தர்ம முனீஸ்வரன், பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர், தொடர்ந்து 3 முறை நேரில் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி பிரீத்தா தெரிவித்து இருந்தார்..

அதன்படி, தர்ம முனிஸ்வரன் மதுரை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

பின்னர், தர்ம முனீஸ்வரனிடம் தீர்ப்பு வழங்க உள்ள போக்சோ நதிமன்ற நீதிபதி பிரித்தா முன்பு காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.

குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்றும், உங்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். எதுவும் சொல்லாமல் இருந்தார் தர்ம முனீஸ்வரன். அப்போது தர்ம முனீஸ்வரனிடம் குடிக்க தண்ணீர் எதுவும் வேண்டுமா என கேட்டார் நீதிபதி ப்ரீத்தா.

பின்னர், குற்றவாளி தர்ம முனிஸ்வரனை குற்றவாளி என்று அறிவித்தார் நீதிபதி ப்ரீத்தா. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொலை செய்த வழக்கிற்காக இரட்டைத் தூக்கு தண்டனையும், மாணவியின் உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸிங்கர் சிறப்பாக வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த 77-வது நாளான இன்று (25-ம் தேதி) தீர்ப்பளிக்கப்பட்டது.

மேகதாது: `எந்த முகாந்திரமும் இல்லை'- தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய... மேலும் பார்க்க

NEET: `இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!' – மத்திய அரசு, NTA-வை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

2026-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலை... மேலும் பார்க்க

Twisha Sharma case: `நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா?' - வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது முன்னாள் நடிகை த்விஷா ஷர்மாவின் மரணம். மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், தனது கணவர் வீட்டில் கடந்த மே 12-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண... மேலும் பார்க்க

``ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது" - உமர் காலித் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!

டெல்லி கலவர வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உமர் காலித் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனது மறைந்த மாமாவின் 40வது நாள் சடங்கில் பங்கேற... மேலும் பார்க்க

`தெரு நாய்களை மீண்டும் பொது இடங்களில் விட முடியாது! மாநில அரசுகள்...' - உச்ச நீதிமன்றம் அதிரடி!

நாடெங்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் தெரு நாய் கடி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கியமான, அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெரு நாய்களைக்... மேலும் பார்க்க

15 வயது சிறுமியின் போராட்டம்: `அவள் கனவுகள் முக்கியம் சட்டத்தை மாற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் காட்டம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் 31 வார கர்ப்பமாக இருந்தார். இந்த கர்ப்பம் தன் கல்வியை பாதிப்பதோடு, மனதளவில் பெரும் சிக்கலையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு மிகுந்த மன உளைச... மேலும் பார்க்க