செய்திகள் :

'ஜூலைக்கு மேலும்' கச்சா எண்ணெய் விலை $90 டாலர்களா? இந்தியாவிற்கு காத்திருக்கும் நிதிச்சுமைகள்!

post image

ஈரான் போர் முடிந்து, ஹார்முஸ் நீர்சந்தி திறக்கப்பட்டால் கூட, சர்வதேச சந்தையில், ஒரு பீப்பா கச்சா எண்ணெயின் விலை 85-90 டாலர்களுக்குத் தான் விற்பனையாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலை நீடித்தால், இந்திய பொருளாதாரத்திற்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை ஜெஃப்ரிஸ் நிறுவனம் தற்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

> ஜூலைக்குப் பிறகும், கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்கள் என விற்பனையாகி வந்தால், இந்தியா ரூ.1.25 டிரில்லியன் - 1.50 டிரில்லியன் அளவிற்கு நிதிச்சுமையை சந்திக்கும்.

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே

> 2027 நிதியாண்டில், சாலை, ரயில்வே, கட்டமைப்பு போன்றவைகளுக்கு மத்திய அரசு கடந்த நிதியாண்டை விட, 10 சதவிகிதம் அதிகமாக பட்ஜெட் ஒதுக்கி உள்ளது.

ஆனால், நிதிச்சுமையினால், இந்தப் பட்ஜெட் ஒதுக்கீடு 0 - 2 சதவிகிதம் வரையில் குறையலாம்.

> கச்சா எண்ணெய் விலை உயர்வு அதை இறக்குமதி செய்யும் போது, ரூ.75,000 கோடி - 90,000 கோடி வரை நிதிச்சுமையை அதிகரிக்கும்.

> கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இரண்டு மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்தன.

இதனால், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வு இறக்குமதி வரி வருமானத்தை ரூ.1 டிரில்லியன் - 1.2 டிரில்லியனுக்குக் குறைக்கும்.

> உலக அளவில் எல்.பி.ஜி விலை 44 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் எல்.பி.ஜி விலை வெறும் 7 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

யுரியா விலை சர்வதேச அளவில் 120 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உரங்களின் விலை ஏற்றப்படவில்லை.

உரம்
உரம்

இதனால், உரங்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.0.30 டிரில்லியன் - 0.40 டிரில்லியன் அளவிற்கு நிதிச்சுமை.

> இந்திய வானிலை மையத்தின் கணிப்புப்படி, வருகிற ஜூன் - செப்டம்பர் மாதங்களில் வழக்கத்தை விட, 8 சதவிகிதம் குறைவாகவே மழை பெய்யும்.

இதனால், கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள், விவசாயத்தைத் தாண்டி, பிற வேலைகளையும் தேடுவார்கள்.

இதனாலும், ரூ.0.10 - 0.20 டிரில்லியன் நிதிச் சுமையை ஏற்றும்.

இதை சமாளிக்க மாநில அரசுகள் மத்திய அரசுகளிடம் தான் நிதிக் கேட்கும். இதுவும் இந்திய பொருளாதாரத்திற்கு சிக்கல்.

> இத்தனைக்கு மத்தியில் ஒரே ஒரு நல்லது என்றால், இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும், தங்கம், வெள்ளி இறக்குமதி தொடர்ந்து நடக்கும்.

இதனால், இந்தியாவிற்கு ரூ.0.4 டிரில்லியன் - 0.6 டிரில்லியன் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.

வேலூர்: குறைகளைச் சொன்ன தூய்மைப் பணியாளர்கள்; குறிப்பெடுத்துக்கொண்ட தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன்!

உலக பட்டினி தினத்தையொட்டி, வேலூர் சட்டமன்றத் தொகுதி த.வெ.க சார்பாக இன்றைய தினம் சி.எஸ்.ஐ மத்திய தேவாலய வளாகத்தில் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள்... மேலும் பார்க்க

’மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுக-விற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’– காங்கிரஸ் பதிலடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் பங்கேற்றது முதல் தி.மு.க... மேலும் பார்க்க

தவெகவில் இணைகிறாரா சி.விஜயபாஸ்கர்? - தொகுதியில் `திடீர்' சந்திப்பு கூட்டம்; தொடரும் கருத்துக் கேட்பு

தமிழக அரசியலில் தினமொரு திருப்பம் அரங்கேறி வரும் வேளையில், தவெக அரசுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் சில்லு சில்லாகச் சிதறிய அண்ணா திமுக, இப்போது திடீரென ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது.ஆனால், இந்த ஒட்டுதல் நிரந... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணியை வரவேற்க செல்லாத அதிமுக முக்கிய நிர்வாகிகள் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வகித்து வந்த அ.தி.மு.க. கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டத... மேலும் பார்க்க

`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்சர் வன்னிஅரசு பேட்டி

தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வைச் சேர்ந்த வன்னிஅரசு மே 22, 2026 அன்று பதவியேற்றார். அமைச்சர் வன்னிஅரசு அவர்களை சந்தித்து அண்மை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.``... மேலும் பார்க்க

கொளுத்தும் வெயில்; அச்சுறுத்தும் Heat Stroke - பாதுகாப்பாக இருப்பது எப்படி? டாக்டர் டிப்ஸ்!

"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது, அதோடு பல சவால்களும் சேர்ந்து வந்துள்ளன. இந்த வெயிலின் தாக்கம் நம் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது. எனவே, நீங்கள் அனைவரும் தேவையான ம... மேலும் பார்க்க