செய்திகள் :

Sooryavanshi: சதம் மிஸ்... ஆனால் சாதனைகள் மிஸ் ஆகாது! - ரெக்கார்டுகளை நொறுக்கிய 15 வயது சூரியவன்ஷி!

post image

ஐபிஎல் 2026 சீசனின் குவாலிஃபயர் 2 போட்டி.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில், பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடிக்கத் தவறினாலும், எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தி சரித்திரம் படைத்திருக்கிறார்.

நியூ சண்டிகரில் நடந்த இந்த ஆட்டத்தில் அவருடைய ஒவ்வொரு ரன்னும் ஒரு புதிய சாதனையை நோக்கிய படியாகவே அமைந்தது.

வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi
வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Sooryavanshi

இந்த ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை எந்தவொரு இந்திய மற்றும் வெளிநாட்டு அன்கேப்டு வீரரும் செய்யாத மாபெரும் சாதனையை வைபவ் நிகழ்த்தியுள்ளார்.

நேற்றைய போட்டியின்போது இந்த மைல்கல்லை எட்ட அவருக்கு வெறும் 20 ரன்களே தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ககிசோ ரபாடாவின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஸ்டைலாக இந்த சாதனையை நிறைவு செய்தார்.

இளம் வயதில், சர்வதேச அனுபவம் இல்லாத ஒரு வீரர், ஐபிஎல் போன்ற பெரும் தொடரில் 700 ரன்களைக் கடப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

இது வைபவ்வின் மற்றொரு மகுடம். ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் படைத்துள்ளார். வெறும் 440 பந்துகளில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

இன்னிங்ஸ் அடிப்படையில் பார்த்தால், 23 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டி, அதிவேகமாக இந்த இலக்கை அடைந்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஒட்டுமொத்தப் பட்டியலில் ஷான் மார்ஷுக்கு (21 இன்னிங்ஸ்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இது அவருடைய அசாத்தியமான ஃபார்மையும், ரன் சேர்க்கும் வேகத்தையும் காட்டுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் தொடக்கம் முதலே பவர்பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்து வருகிறார் வைபவ். குஜராத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில், பவர்பிளேவில் 17 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதன் மூலம், 2026 ஐபிஎல் சீசனில் மட்டும் பவர்பிளே ஓவர்களில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்தது.

இதற்கு முன்பு 2016-ல் டேவிட் வார்னர், பவர்ப்ளே ஓவர்களில் 467 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இப்போது வைபவ் சூர்யவன்ஷி சர்வ சாதாரணமாகத் தகர்த்தெறிந்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடர் அல்லது டோர்னமென்டில் அதிக பவுண்டரிகள் (ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் இப்போது வைபவ் வசமாகியுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகளுடன் இந்த சாதனையை வைத்திருந்தார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 பவுண்டரிகள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 14-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 129 பவுண்டரிகளுடன் புதிய உலக சாதனை படைத்தார் இந்த இளம் வீரர்.

ஏற்கனவே ஒரு சீசனில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை இதற்கு முந்திய போட்டியில் நிகழ்த்தினார் வைபவ். முதல் இடத்தில் இருந்த யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயிலை பின்னிக்கு தள்ளினார் இந்த யுனிவர்சல் பேபி பாஸ் வைபவ்!

இந்த ஐபிஎல் 2026 சீசனில் வைபவ்வின் ஆட்டம் உச்சபட்சமாக அமைந்திருக்கிறது. 16 போட்டிகளில் விளையாடி, 48.50 என்ற சராசரியுடன் 776 ரன்களைக் குவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 237.30 என்பது பந்துவீச்சாளர்களுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்கியதை உணர்த்துகிறது.

இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். குவாலிஃபயர் 2 போட்டியில் சதம் கைநழுவிப் போனாலும், இந்த 15 வயது வீரர் படைத்த சாதனைகள் பல ஆண்டுகள் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.!

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் த... மேலும் பார்க்க

அஸ்தமனமான சன்ரைசர்ஸ்; சம்பவத்தை நிகழ்த்திய சூர்யவன்சி! - எப்படி வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்?

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபயர் - 2-க்கு முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸுக்கு இடையிலான அந்தப் போட்டிதான் இறுதிச் சுற்றில் ஆர்... மேலும் பார்க்க

RR vs SRH: "சூரியவன்ஷியுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம்!" - ரியான் பராக்

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது. நடந்து முடிந்த இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளிலும... மேலும் பார்க்க

RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" - ஆட்டநாயகன் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 27) விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும் என்றஇந்த இக்கட்டான போட்டியில்,... மேலும் பார்க்க

RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" - கம்மின்ஸ் வருத்தம்

ஐபிஎல் 2026 நேற்றைய (மே 27) தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி ... மேலும் பார்க்க

RCB-யின் 254 ரன்கள்: `இது ஒரு முட்டாள்தனமான கேள்வி!’ - பத்திரிகையாளரிடம் சீறிய கிளென் பிலிப்ஸ்

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் படுதோல்வி அடைந்தது. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில், குஜராத் அணியின் வீரர் கிளென் பி... மேலும் பார்க்க