செய்திகள் :

மும்பை: மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கொடூர கிரிமினல் கணவன் கைது

post image

மும்பை தேவ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அர்பாஸ் செய்யத். பல்வேறு கிரிமினல் வழக்குகள் அர்பாஸ் மீது இருக்கின்றன. உள்ளூரில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்தான்.

அர்பாஸ் தனது வீட்டில் மனைவியுடன் குடும்ப பிரச்னையில் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மனைவியை அடித்து உதைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர் மனைவியை தனி அறையில் அடைத்து வைத்தார். அதோடு வாளைக் காட்டி கொலை செய்துவிடுவதாகவும், முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவதாகவும் கூறி மிரட்டி தனது மனைவியை தனிமை நிலையில் தரையில் கால்களை ஊற்றி அமரவிடாத (rooster position) நிலையில் 4 மணி நேரம் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அதாவது கால்களால் அல்லாமல் கைகளை ஊற்றி நிற்கச் சொல்லியிருக்கிறார்.

கணவர் கைது
கணவர் கைது

கணவனின் மிரட்டலுக்குப் பயந்து அப்பெண் அது போன்று 4 மணி நேரம் இருந்தார். அர்பாஸ் வெளியில் சென்ற நேரம் பார்த்து அப்பெண் அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். உடனே அர்பாஸ் அங்கும் பின்தொடர்ந்து சென்றார். அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட அர்பாஸ் தனது மனைவியை கத்தியால் குத்தினார்.

இதனால் வேறு வழியில்லாமல் அப்பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அர்பாஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அர்பாஸ் மீது மும்பை முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் 19 கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அர்பாஸ் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அர்பாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மூடப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் ஆய்வு - திருச்சி பரபரப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற வெடி மருந்து நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் கடந்த 2016-ல் நிகழ்... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவி... மேலும் பார்க்க

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை... மேலும் பார்க்க

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க