செய்திகள் :

அந்தரன்: "பிரஜின் உடைஞ்சு அழுவதைப் பார்த்திருக்கேன்; ரொம்ப வருஷ கனவு இது" - சாண்ட்ரா எமோஷனல்

post image

பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’.

சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரஜனின் மனைவியும் நடிகையுமான சாண்ட்ரா, "ரொம்ப வருஷதுக்கு அப்புறம் ஒரு மேடைக்கு வந்திருக்கேன். இது மிகச்சிறந்த ஒரு தருணம்.

அந்தரன்
அந்தரன்

நாங்க எவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியும். நிறைய மேடையில பிரஜினைப் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் நடிக்கும்போது அவர் கடினமா உழைப்பாரு.

நமக்கான இடம் கிடைச்சிரும்னு ஓடிட்டே இருப்பாரு. அவர் பக்கத்தில இருந்து எல்லாத்தையும் நான் பார்த்திருக்கேன். அவர் உடைஞ்சு அழுகிறதைப் பக்கத்தில இருந்து பார்த்திருக்கேன்.

இது எல்லாத்தையும் மாத்துகின்ற வகையில ஒரு படத்தைத் தேடிக்கிட்டு இருக்கும்போதுதான் 'அந்தரன்' படம் எங்களுக்கு வந்தது. இதை பிரஜின் என்கிட்ட சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

யாராவது கைக்கொடுக்க மாட்டார்களா என்று நினைக்கும்போது இந்தப் படம் வந்தது. 18 வருஷமா இதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.

பிரஜின் - சாண்ட்ரா
பிரஜின் - சாண்ட்ரா

இந்தப் படம் எங்களை எங்கையோ எடுத்திட்டு போகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. எங்களோட ரொம்ப வருஷ கனவு.

எல்லாரும் இந்தப் படத்தைப் பார்த்து சப்போர்ட் பண்ணுங்க" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிர... மேலும் பார்க்க

"அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துட்டாங்க!" - லிங்குசாமி

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைகூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந... மேலும் பார்க்க

Killer: எஸ்.ஜே.சூர்யா படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்; என்ன நடந்தது?

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது 'கில்லர்'... மேலும் பார்க்க

கருப்பு: ``அதே அன்பு, அரவணைப்பு, கனிவு" - முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வ... மேலும் பார்க்க

"'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும்; ஆனால்..."- மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட் என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பைசன் காளமாடன்'. தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 'பைசன்... மேலும் பார்க்க

"`எனக்கு சொந்தம் இல்ல; நீங்கதான் இறுதி சடங்கு செய்யணும்'னு சத்யேந்திரா சொன்னார்"- உதவும் கரங்கள் பகு

நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திரா கடந்த வாரம் இயற்கை எய்தினார். சினிமா சார்ந்த நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். பெங்களூருவைச் சேர்ந்தவர் பல ஆண்டுகளாகச் சென்னையில் த... மேலும் பார்க்க