செய்திகள் :

டெல்லி கொடுத்த முக்கியத்துவம்! பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை? - தொடரும் இழுபறி!

post image

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது. தனது அதிருப்தி காரணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் நிதின் நபின் மற்றும் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட பாஜகவின் தேசியத் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகும், அவரது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த குழப்பம் நீடிப்பதால், தமிழக பாஜகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

அமித் ஷா, அண்ணாமலை

செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்புகளில், தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாமலை தனது கருத்துக்களைத் விரிவாக எடுத்துரைத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அதிமுகவுடன் பாஜக அமைத்த கூட்டணி, கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை வெகுவாகப் பாதித்ததாக அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தனித்து நின்று கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது அண்ணாமலையின் தொடக்க கால நிலைப்பாடாக இருந்தது. ஆனால், அதிமுகவோ, கூட்டணியின் முன்நிபந்தனையாக அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. இந்த அரசியல் சூழலில்தான், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இது தவிர, சில பாஜக மற்றும் அதிமுக தலைவர்களின் அணுகுமுறை குறித்தும் அண்ணாமலை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.

அண்ணாமலை எழுப்பிய பிரச்சினைகள் அனைத்தும் மாநிலத் தலைவர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும் என தேசியத் தலைமை அவருக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலையின் புகார்கள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இது, அண்ணாமலையின் கருத்துக்களுக்கு கட்சித் தலைமை முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டுகிறது.

இந்த சந்திப்புகளின் போது அண்ணாமலையின் ராஜினாமா குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அவர் பாஜகவில் தனது எதிர்காலத்தை அவர் காணவில்லை என ன்னாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியிலே, அவருக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமித்ஷா - அண்ணாமலை
அமித்ஷா - அண்ணாமலை

தற்போதைய சூழலில், அண்ணாமலை முதலில் ஒரு மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைத்து, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய வலுவான தொண்டர்கள் வலையமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த புதிய அமைப்பு, வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு, தனது தனிப்பட்ட செல்வாக்கையும், அமைப்புத் திறனையும் சோதித்துப் பார்க்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரி, அரசியல்வாதி எனப் பரிணமித்த அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம், தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அவர் கட்சியில் நீடிப்பாரா அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பாரா என்பதைப் பொறுத்தே தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட மாற்றங்கள் நிகழும்.

டெல்லி: உணவகத்தில் தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு; பின்னணி என்ன?

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தற்போது வரை 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று (ஜூன் 3) கா... மேலும் பார்க்க

விஜய்யுடன் தனிப் பாதுகாவலர்: "காவல்துறையினரின் பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லையா?" - இன்பதுரை கேள்வி

தவெக தலைவர் விஜய் முதல்வராவதற்கு முன்பு இருந்தே அவரின் பாதுகாவலராக நயீம் முசா என்பவர் இருந்து வருகிறார். தற்போது விஜய் முதல்வரான பிறகும் அவரே பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். சமீபத்தில் முதல்வர் ... மேலும் பார்க்க

`600 -700 ஆண்களாலும் விலங்குகளை வைத்தும் வன்கொடுமை..' - பிரிட்டனை உலுக்கிய பாகிஸ்தானிய கும்பல்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ள ஒரு `பாலியல் கூட்டு வன்கொடுமை அறிக்கை' ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள டெல்ஃபோர்ட் நகரில், ... மேலும் பார்க்க

`காலதாமதம் இருக்கும்தான், அதுக்காக இவ்வளவா?' - 39 வயதில் எழுதிய தேர்வு; 60 வயதில் வந்த அரசு வேலை!

தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும், தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதே சமயம், கேரளாவில் இள... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: திமுக கள ஆய்வில் அடுக்கடுக்கான புகார் - மாவட்டச் செயலாளருக்குச் சிக்கல்?

தி.மு.க திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் க.தேவராஜி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான தேவராஜி பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியதால், நடந்து... மேலும் பார்க்க

குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதா?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது. ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை... மேலும் பார்க்க