ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞ...
"அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துட்டாங்க!" - லிங்குசாமி
வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைகூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பற்றி இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "தேர்தல் முடிவுகல் சமயத்துல என்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து, முடிவுகளைப் பார்ப்போமானு கேட்டேன். 'எனக்கு என்னமோ மேஜிக் நடக்கப் போகுதோ என்று தோணுது' என்று ஷங்கர் சார்கிட்டயும் சொன்னேன்.
பிறகு எங்க வீட்டுக்கு முடி வெட்டுவதற்கு ஒரு தம்பி வருவாரு. அவர்கிட்ட 'ஓட்டு போட்டுட்டீங்களா' என்று கேட்டேன்.
அவர் 'போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்' என்று சொன்னார்.
பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்கிட்ட தவெக-வுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னாங்க. 'எல்லோரும் தவெக-வுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே'னு அப்போவே என்னமோ நடக்கப் போகுது என்று தோணுச்சு. இன்னைக்கு இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கு.
அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள்ள வந்துட்டாங்க. சட்டசபையில ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதுனால தொடர்ந்து பார்க்கிறோம். அதுவும் இப்போ மதிப்புமிக்க ஃபுட்டேஜ்-ஆக மாறிடுச்சு" என்றவர், "தயாரிப்பாளர் சௌத்ரி சார் மறைவின்போது அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் வந்திருந்தாரு.

போகும்போது அவர் காரில் ஏறிட்டார். அப்போது என்னைப் பார்த்தவர் மறுபடியும் வெளியே இறங்கி வந்து எனக்குக் கைகொடுத்துப் பேசினாரு. காரிலிருந்தே கண்ணாடி வழியாகவே எனக்கு அவர் கை காட்டியிருக்கலாம்.
ஆனா, இறங்கி வந்து பேசினார். அப்போ நான் அவர்கிட்ட 'இது பெரிய நிகழ்வு'னு வாழ்த்து சொன்னேன். அவரும், 'ரொம்ப சந்தோஷம்ணா, வீட்டுல மீட் பண்ணுவோம்' என்று சொல்லிட்டு கிளம்பிட்டார். அந்த இடத்துக்காக அவர் உழைச்சிருக்கார்.
விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார். ஷூட்டிங்கிற்குச் சொன்ன நேரத்திற்கு வந்து நிப்பாரு. அதுனாலதான் காலம் அவங்களுக்கு இதைத் திரும்பக் கொடுத்திருக்கு" எனப் பேசினார்.

















