செய்திகள் :

`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.

திமுக -காங். மோதல்
திமுக -காங். மோதல்

அவையில் நேரமில்லா நேரத்தில் கடைசி ஒரு சிலருக்கு முன்பாக காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியத்துக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எழுந்த சாமுவேல், 'பெருந்தலைவர் காமராஜர் வாழ்க... ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனச் சொல்லி அதை நிறைவேற்றி எங்களையும் அமைச்சரவையில் இடம்பெற செய்த ஜனநாயகன்... தளபதி ... முதல்வர் விஜய்க்கு நன்றி' எனப் பேச்சை தொடங்க முற்பட்டார்.

அதற்குள்ளாகவே திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர். திமுக கவுன்சிலர்கள் இடையூறு செய்ததால் காங்கிரஸ் கவுன்சிலரால் பேச முடியவில்லை. தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் இருக்கையிலிருந்து எழுந்து வந்து காங்கிரஸ் கவுன்சிலர்களை சூழ்ந்து கொண்டு 'நம்பிக்கை துரோகி காங்கிரஸ்' என கடுமையாக கோஷம் போட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள், '5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல என்ன ஆச்சு' என ஆவேசமாகப் பேச வாக்குவாதம் முற்றியது.

திமுக -காங். மோதல்
திமுக -காங். மோதல்

கிட்டத்தட்ட கைகலப்பை நோக்கி வாக்குவாதம் சென்ற நிலையில், காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேறினர். இருதரப்பும் மோதிக் கொண்டதால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது. மேயர் பிரியா தீர்மானங்களை நிறைவேற்றாமலேயே அவையை முடித்து வைத்து தேசிய கீதம் பாடச் சொன்னார்.

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை"... மேலும் பார்க்க

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.... மேலும் பார்க்க

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பார் வசதியோடு செயல்பட்டு வரும் அந்தக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறி... மேலும் பார்க்க

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க