செய்திகள் :

தவெக அமைச்சரவையில் இணைந்த விசிக, IUML; அமைச்சர்களாகப் பதவியேற்ற வன்னி அரசு, ஷாஜகான்

post image

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் த.வெ.க தலைவர் விஜய்.

கடந்த 10-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மொத்தம் 32 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சர் வன்னி அரசு பதவிபிரமானம்
அமைச்சர் வன்னி அரசு பதவிபிரமானம்

அதே நேரம் தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என இரு கட்சிகளும் இடம்பெறுகின்றன என்ற செய்தி வெளியானது. ஆனால், இதை இரு கட்சிகளும் ஆலோசித்து வருவதாகவே தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறுகின்றன. அதன் அடிப்படையில், இன்று ஆளுநர் மாளிகையில் விசிக-வின் திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகானுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

விசிக: "எமது கோரிக்கைகளை அரசாணைகளாக மாற்றிய அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி" - சிந்தனை செல்வன்

த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என இரு கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இன்று ஆளுநர் மாளிகையில் விசிக-வின் திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசு ஆதி திரா... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவையில் விசிக! வன்னியரசுக்கு என்ன துறை ஒதுக்கீடு?

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களு... மேலும் பார்க்க

‘கொங்கு மண்டல திமுக-வில் ஒரு சாதிக்கு மட்டுமே முக்கியத்துவம்’ – பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

தி.மு.க கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளராக மீனா ஜெயக்குமார், அண்மையில் அ.தி.மு.க-வின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இது தொடர... மேலும் பார்க்க

Cockroach Janta Party: அவமானத்தை ஆயுதமாக்கிய இணையப் புரட்சி! - அரசுக்கு சவால் விடும் கரப்பான்பூச்சி!

கரப்பான் பூச்சிகள் - ஒட்டுண்ணிகள்இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15-ம் தேதி ஒரு வழக்கு விசாரணையின்போது, ``வேலையில்லாமலும், எந்தத் தொழிலிலும் இடம் கிடைக்காமலும் இருக்கும் கரப்பான்களைப் போன்ற ... மேலும் பார்க்க

தமிழக அமைச்சரவை: "திமுக போல தவெக-வும் புறக்கணிக்கிறது" - கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் ஆதங்கம்

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதுபோல், தவெக ஆட்சிலும் தங்கள் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.கிருஷ்ணகிரிநடந... மேலும் பார்க்க

தவெக அமைச்சரவையில் விசிக; அமைச்சராகும் வன்னியரசு!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களு... மேலும் பார்க்க