செய்திகள் :

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

post image

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒரு தொகுதி கூடுதலாக இருக்க வேண்டும்.

அதன்படி த.வெ.க-வுக்கு கூடுதலாக 12 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் எப்படியாவது ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்று போராடி வரும் த.வெ.க, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

இதற்கிடையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், அங்கிருந்து வெளியேறி த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்து டிவிஸ்ட் கொடுத்தது.

இதற்கிடையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், கொடுக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பும் கூறியதாக தகவல்கள் வெளியானது.

``அ.தி.மு.க-வுக்கு, தி.மு.க ஆதரவு தரும்...”

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, `த.வெ.க-வுக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுக்க இருப்பதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அ.தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். அது எந்தச் சூழலிலும் த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அழுத்தமாக தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

இந்த நிலையில்தான் புதுச்சேரி – கடலூர் சாலையில் புதுக்குப்பம் பகுதியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில், நேற்று இரவு தொடங்கி விடிய விடிய அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் குவிந்திருக்கிறார்கள். அதையடுத்து, `எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைக்க இருக்கிறது. தி.மு.க அதற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக உறுதியளித்திருக்கிறது.

ரிசார்ட்டில் குவிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

அதனால்தான் தங்கள் எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க ரிசார்ட்டில் குவிக்கிறது' என்று செய்திகள் வெளியானது. அதேபோல முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க-வை உடைத்து, பதினைந்திற்கும் மேற்பட்ட தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் த.வெ.க-வுடன் கைகோர்க்க இருக்கிறார்கள். அதனால் சி.வி.சண்முகம் தலைமையில்தான் இந்த எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

நிர்மலா சீதாராமன், சி.வி.சண்முகம், வேலுமணி

அதனால் நேற்று இரவு அந்த தனியார் விடுதி முன்பு செய்தியாளர்கள் குவிந்தனர். அடுத்தடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அந்த விடுதியில் குவிந்து கொண்டிருந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர், ``த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் வலியுறுத்தியது உண்மைதான்.

``காங்கிரஸ் வெளியேறினால் சூழல் மாறலாம்...”

ஆனால், `அப்படி செய்தால் அ.தி.மு.க முழுவதுமாக முடிந்துவிடும்' என்று கூறி, எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு, சில எம்.எல்.ஏ-க்களிடம் த.வெ.க-வுக்குப் போவது குறித்து தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள்.

இது தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி எங்கள் எம்.எல்.ஏ-க்களை புதுச்சேரியில் தங்கும்படி உத்தரவிட்டார். த.வெ.க-வுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்கக் கூடாது என்று அழுத்தமாகக் கூறி வரும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அந்த விடுதியில்தான் இருக்கிறார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

அதிலிருந்தே என்ன நடக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். கட்சிக்குள் இப்போது நடக்கும் குழப்பத்திற்குப் பின்னால் பா.ஜ.க-வின் அரசியல் விளையாட்டு இருப்பதாகவும் சந்தேகிக்கிறோம். அதேசமயம் காங்கிரஸ் ஒருவேளை த.வெ.க-வில் இருந்து வெளியேறினால் எங்கள் நிலைப்பாடு மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்றார்.

இதற்கிடையில் முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் நேற்று இரவு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், `த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க எந்த இடையூறும் செய்யாது. அரசியலமைப்பு நெருக்கடி அல்லது மற்றொரு தேர்தலை தி.மு.க விரும்பவில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க