செய்திகள் :

"தவெக முன்னிலை எனச் சூதாட்ட கும்பல் வதந்தி பரப்புகிறது; விஜய் பெயரில்..." - திருமா என்ன சொல்கிறார்?

post image

நாளை (மே.4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக முற்போக்கு கூட்டணி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்.

திருமாவளவன், ஸ்டாலின்
திருமாவளவன், ஸ்டாலின்

திமுக ஆட்சி தொடரும். திமுக கட்சிக்காக எங்களது தோழர்கள் ஆற்றியப் பணி அளப்பரியது. அதனை திமுக வேட்பாளர்களும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.

திமுக கூட்டணியைச் சிதறடிக்கப் பார்த்தவர்களின் முயற்சி தோல்வியடைந்து அவர்கள் ஏமாந்து போவார்கள். தவெக முன்னிலை எனச் சூதாட்ட கும்பல் வதந்தி பரப்புகிறது.

விஜய் பெயரில் நிறைய சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முன்பு திமுகவை முன்வைத்து சூதாட்டத்தை நடத்தினார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அகில உலக அளவில் இது நடைபெறுகிறது. இப்போது தேர்தல் வாக்குப்பதிவிற்கு பின்பு விஜய்யை முன்வைத்து இந்தச் சூதாட்ட காய்களை நகர்த்துகிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்" என்று கூறியிருக்கிறார்.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க