செய்திகள் :

'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல!' - ஜாய் ஆலுக்காஸ்

post image

வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையும், கல்யாண் ஜுவல்லர்ஸும் பெற்றுள்ளன.

‘தாய் மாமன் தங்க மோதிரம்’
‘தாய் மாமன் தங்க மோதிரம்’

ஜாய் ஆலுக்காஸும், கல்யாண் ஜுவல்லர்ஸும்

இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்துச் செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS-தரமுத்திரை போன்ற அனைத்துக் கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்திருந்தது.

அடுத்ததாக, ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்கக் கோரியதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் மட்டுமே இசைவு தெரிவித்திருந்தது.

ஆகையால், இந்த இரு நிறுவனங்களுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் சென்றுள்ளது.

எழும் விமர்சனங்கள்

2010 காலக்கட்டங்களில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தூதராகத் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் இருந்தார். ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் இணை நிறுவனங்கள் ஆகும்.

இதனால், தமிழ்நாடு அரசின் திட்டம் ஜாய் ஆலுக்காஸிற்குக் கிடைத்திருப்பது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

ஜாய் ஆலுக்காஸ் பதிவு

இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கான டெண்டர் கிடைத்திருப்பது குறித்து, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“தமிழ்நாட்டின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்’ நாங்களும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறோம்.

ஜாய் ஆலுக்காஸ்
ஜாய் ஆலுக்காஸ்

எங்கள் பங்களிப்பு லாபத்திற்காக அல்ல; சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்கும் எண்ணத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் சார்பில் வழங்கப்படும் ஒவ்வொரு மோதிரமும் அதன் தூய்மை, ஹால்மார்க் முத்திரை மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றுக்கான எங்கள் நம்பிக்கையைத் தக்கவைக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க