செய்திகள் :

```திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

post image

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, ``காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் ‘பொய்களின் கூச்சல்’ (ஜூட் கி கூஞ்ச்). உண்மையின் கம்பீரமான கர்ஜனைக்கு முன்னால் பொய்யான உரத்த சத்தங்கள் நிலைத்து நிற்க முடியாது.

கடந்த 2013-ம் ஆண்டு இதே கல்லூரி மேடையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசினேன். அன்று நான் அளித்த வாக்குறுதிகளையும், நாட்டின் தற்போதைய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குத் தைரியம் இருக்கிறது.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2013-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்து, ஊழல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிறைந்திருந்தது. இன்று உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தான் குறிப்பிட்ட 'சிந்தனைவாதி நக்சல்கள்' (திமாகி நக்சல்) என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது.

அந்த மருந்து அளிக்கப்பட்டவுடன், நோயின் அறிகுறிகள் வெளியே வருவது போல, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் இப்போது தங்களின் உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறை பலமடைந்துள்ளதுடன், நாட்டில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" - ஸ்டாலின்

நடப்பு சட்டமன்றத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" - செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் ... மேலும் பார்க்க

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் நிர்மல் குமார்

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை திமுக: "உன் மகனின் துரோகச் செயல்"- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் ( செப்டம்பர்- 5) நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேடையேறி மைக்கைப் பிடுங்கிப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகத்திற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே கார... மேலும் பார்க்க

`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' - 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட... மேலும் பார்க்க