செய்திகள் :

"திமுகவைக் குறைத்து மதிப்பிட்டால், அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம்" - கார்த்தி சிதம்பரம்

post image

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது தவெக.

தவெக - காங்கிரஸ்
தவெக - காங்கிரஸ்

தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது.

அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எந்த அறிவிப்பையும் தெரிவிக்காமல் சென்ற காங்கிரஸ் கட்சியை திமுக கடுமையாகச் சாடியிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், " தவெக-வைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இத்தனை சீட்டுகள் வெல்லும் என்பதை நானே தவறாகத்தான் கணித்தேன். நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும். ஸ்டாலின் மீது இப்போதும் மரியாதை உள்ளது. ஆட்சி அமைக்க முடியாத திமுக முதுகில் காங்கிரஸ் குத்தியது எனச் சொல்வது பொருத்தமற்றது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு நற்பெயர் உள்ளது. இந்தத் தேர்தலில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு விஜய்க்கு நற்பெயர் இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அவரது செயல்பாட்டைப் பொறுத்து அந்த நற்பெயர் எப்படி வளரும் என்று பார்க்க வேண்டும். தவெக என்பது பிரதான அரசியல் கட்சியாக தமிழகத்தில் இருக்கும். அதேபோல், திமுகவும் பிரதான அரசியல் கட்சியாக இருக்கும்.

திமுகவைக் குறைத்து மதிப்பிட்டால் அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதிமுகவும் பாஜகவும் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளன" என்று பேசியிருக்கிறார்.

சனாதனம்: "இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால்தான்..." - முதல்வர் விஜய்க்கு நயினார் கேள்வி

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' சனாதனம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சமூக நீதிக்கு நல்... மேலும் பார்க்க

’செங்கோட்டையன் வேண்டுகோளை ஏற்று.!’ - தவெகவுக்கு தாவும் கோவை அதிமுக நிர்வாகிகள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து இருப்பதோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து... மேலும் பார்க்க

ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு: அமெரிக்காவிற்கு 'ஈரான்' பிரச்னை; சீனாவிற்கு 'தைவான்' பிரச்னை

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு ட்ரம்ப், சீனா சென்றிருந்தார். அதன் பிறகு, இப்போது தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சீனா சென்ற... மேலும் பார்க்க

'அதிமுகவுக்கு மினிமம் 5 அமைச்சர்கள்!' - டிமாண்ட் ஏற்றும் வேலுமணி டீம்; இறுதிக்கட்ட ஆலோசனையில் விஜய்?

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையி... மேலும் பார்க்க

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க