செய்திகள் :

`திமுக, அதிமுக-வுக்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும்' - அமைச்சர் நிர்மல்குமார் ஆருடம்

post image

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியாவது முதலமைச்சரின் கரூர் பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சி.பி.ஐ விசாரணை குறித்துப் பேசும் இவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது எப்.ஐ.ஆர் கூட முழுமையாகப் படிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர்.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில், வெறும் 10 முதல் 15 பேரைத் தவிர இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும்.

அந்த அளவுக்குத் தமிழக மக்கள் அவர்களைப் புறக்கணித்து, எங்களை ஆதரித்து வருகிறார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். முதலமைச்சர் தலைமையில் விரைவில் அடுத்தகட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கூட்டணிக்கான பெயர் மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.” எனத் தெரிவித்தார்.

”இன்னொரு தேர்தல் வந்தாலும் 180 இடங்களில் தவெக வென்று ஆட்சி அமைக்கும்” - சொல்கிறார் வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாள... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! | Photo Album

முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய்முதல்வர் விஜய் மேலும் பார்க்க

விசிக: 'எந்த அரசியலும் இல்லை'; அமைச்சரவை பெயர் மாற்றம் - ரவிக்குமார் எதிர்ப்புக்கு வன்னி அரசு பதில்!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு அமைந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற அமைச்சகத்தின் பெயர் ‘சமூகநீதித்துறை’ என மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் அமைச்சர் வன்னி அரசு பத... மேலும் பார்க்க

ஆலங்குளம்: அரசு நெல் சேமிப்பு மையத்தில் பயங்கர தீ – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம்?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில் செயல்பட்டு வரும் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

"அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" - ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையொட்டி, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், ஹார்முஸ் நீ... மேலும் பார்க்க

'நோபல் பரிசு கொடுக்கலாம்'- திமுகவுடன் நட்பு தொடரும் என்ற திருமாவின் கருத்துக்கு வைகோ பளிச் பதில்

விசிக விருது வழங்கும் விழா சென்னையில் ஜூலை. 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.இது​வரை நா... மேலும் பார்க்க