செய்திகள் :

சூடான சமோசா வாங்க ரயிலை நடுவழியில் நிறுத்திய பைலட் ? - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

post image

ரயில்களை தேவையில்லாமல் நிறுத்தம் இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. ஆனால் சில நேரங்களில் தொழில் நுட்ப காரணங்களுக்காக ரயில் சில இடங்களில் நிறுத்தப்படுவதுண்டு. ஆனால் மத்திய பிரதேசத்தில் ரயில் டிரைவர்கள் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர்-மவூ இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிரைவர் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ராவ் பகுதியில் உள்ள ரங்வாசா சாலை ரயில்வே கேட்க்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரயில் நின்றதும், அங்கிருந்த கடையில் இருந்து ஒருவர் இரண்டு பொட்டலங்களில் சமோசாக்களை ரயில் டிரைவரிடம் கொடுப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அடிக்கடி இந்த இடத்தில் ரயில் நிறுத்தப்படுவதாகவும், ரயில் டிரைவர் சென்று சமோசா வாங்கி வருவதாகவும், இதனால் 10 நிமிடத்திற்கும் மேல் ரயில் தாமதம் அடைவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் குமார் இது குறித்து அளித்த பேட்டியில்,''எந்தவொரு செயல்பாட்டுத் தேவையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட காரணமோ இன்றி ரயில் நிறுத்தப்பட்டு, லோகோ பைலட் தனது தனிப்பட்ட வேலைக்காக கேபினை விட்டு வெளியேறியது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால், ரயில்வே விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ராவ் ஹோம் சிக்னலில் திட்டமிடப்பட்ட பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே அந்தச் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. உணவு வாங்குவதற்காக அது நிறுத்தப்படவில்லை," என்று ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோ, இந்தூர்-மவூ பயணிகள் ரயிலுடன் (Passenger DEMU) தவறாக இணைக்கப்பட்டுப் பரப்பப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து எடிட் செய்து, தவறான தகவலை உருவாக்கியுள்ளனர் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற உள்ளடக்கங்களைப் பகிர்வதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

சிங்கத்தின் பிடியில் `திக்... திக்' 30 நிமிடங்கள்! - என்ன செய்து உயிர்பிழைத்தார் குஜராத் நபர்?

குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் வாழ்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக உணவு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக அவை அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து விட... மேலும் பார்க்க

AI மூலம் ஆடம்பரம்... உயிருக்கே விலைபேசிய நண்பன்! - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நடந்த விபரீதம்

சமூக வலைதளங்களில் நாம் பகிரும் ஒரு புகைப்படம், ஒரு வீடியோ... அது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா? அல்லது, நமக்கே தெரியாமல் நமக்கெதிரான ஒரு கண்ணியாக மாறி, நமது நிம்மதியையே குலைத்துவிடுமா? நாக்பூரில் நட... மேலும் பார்க்க

மும்பை: கர்ப்பிணிக்குச் சிகிச்சையளிக்க தாமதம்; பெண் மருத்துவரைத் தாக்கிய சிவசேனா கவுன்சிலர்

மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள டோம்பிவிலியில் உள்ள சாஸ்திரிநகர் மருத்துவமனையில், பிரியங்கா (33) என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் குழந்தை வயிற்றில் மாறி இருந்... மேலும் பார்க்க

அயோத்தி கோயிலில் தொடரும் சர்ச்சை: IAS அதிகாரி காணிக்கையாக வழங்கிய ரூ.5 கோடி தங்க புத்தகம் மாயம்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையில், புதிதாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் எஸ்.லட்சுமிநாராயணன், தான் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கிய 5 கோடி ரூபா... மேலும் பார்க்க

பிரபு தேவாவுக்கே சவால் விடுவாங்க போல; 'Mukkabula' பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாவை அதிரவைத்த ஆசிரியை!

நடனப் புயல் பிரபு தேவாவின் நடன அசைவுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு பாடலுக்கு ஆடி, பார்வையாளர்களைக் கவர்வது எளிதான காரியமல்ல. ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த மோதி பெஹரா என்ற பெண்மணி அதைச் செய்துகாட்டி இணையத்தில் ப... மேலும் பார்க்க

Lamborghini ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்; சாவியைக் கொடுத்தனுப்பி, ஆட்டோ ஓட்டிய தொழிலதிபர் | Viral

பெங்களூருவில், போக்குவரத்து சிக்னலில் நடந்த ஒரு சாதாரண உரையாடல், மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. தனது லம்போர்கினி காரை ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம், காரின் சாவியைக் கொடுத்துவிட்டு, அந்த ஆட்டோவை... மேலும் பார்க்க