செய்திகள் :

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? - ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு!

post image

இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வந்துள்ளதால், சில மாற்றங்கள் வருமான வரிக் கணக்கு படிவங்களிலும் வந்துள்ளது.

அந்த மாற்றங்கள்

> இதற்கு முன்பு...

1. சம்பளம், ஒரு வீட்டு வாடகை, இதர வருமானங்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள்,

2. பிரிவு 112A-ன் கீழ் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) கொண்டவர்கள்

வருமான வரிக் கணக்குத் தாக்கல்
வருமான வரிக் கணக்குத் தாக்கல்

3. 5,000 ரூபாய் வரை விவசாய வருமானம் உள்ள இந்தியக் குடிமக்கள் மட்டுமே ITR-1 படிவத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால், இனி அப்படி இல்லை. இனிமேல் இரண்டு வீடுகளை சொத்தாக வைத்திருபவர்களும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஐ.டி.ஆர்-1 படிவத்தில் தாக்கல் செய்யலாம்.

இனி இரண்டு வீடுகளைச் சொத்தாக வைத்திருப்பவர்களும் ஐ.டி.ஆர்-1, 4 படிவத்தில் கணக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், இனி சொத்தின் கூட்டுரிமை (Co-ownership), வாடகைதாரர்களின் விவரங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.

> புதிய படிவங்களில், தனிநபரின் தகவல் பகுதியில், மாற்று முகவரியைக் (Secondary address) குறிப்பிடுவதற்கான புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

> அடுத்ததாக, வரி விகிதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் மூலதன ஆதாயப் பகுதியும் (Capital gains schedule) தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது.

> நன்கொடை தொடர்பான விவரங்களைக் குறிப்பிடும் முறை முன்பு இருந்ததை விட கடுமையாக்கப்பட்டுள்ளது.

> Schedule 80G-ன் கீழ், இனி UPI அல்லது வங்கியின் பரிவர்த்தனை குறிப்பு எண் மற்றும் IFSC குறியீடு போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல்
வருமான வரிக் கணக்குத் தாக்கல்

> Schedule 80GGC-ன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு, அந்த அரசியல் கட்சியின் பெயர் மற்றும் பான் கார்டு விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

> பிரிவு 112A-ன் கீழ், இந்தியக் குடிமக்கள் தங்களுக்குக் கிடைத்த நீண்ட கால மூலதன ஆதாயத்தை இனி ஐ.டி.ஆர்-1 படிவத்திலேயே காட்டலாம். ஆனால், நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மூலம் வந்த லாபம் அந்த நிதியாண்டில் ரூ.1.25 லட்சத்தை தாண்டியிருக்கக் கூடாது.

மேலும், முந்தைய கால நஷ்டங்கள் எதையும் இந்த நிதியாண்டு கணக்கில் கொண்டு வந்திருக்கக் கூடாது.

> முதலீடுகளில் நஷ்டம் அடைந்தவர்கள், அதிக லாபம் ஈட்டியவர்கள் அல்லது சிக்கலான முதலீட்டுப் பரிவர்த்தனைகளைக் கொண்டவர்கள் தொடர்ந்து ITR-2 அல்லது பிற பொருத்தமான படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

> பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் அல்லது சொத்துக்களை விற்பனை செய்த முதலீட்டாளர்கள், சொத்தின் தன்மை மற்றும் வரி விதிப்பு முறைக்கு ஏற்ப தங்களின் பரிவர்த்தனைகளைப் பிரித்து, இன்னும் விரிவான விவரங்களை வழங்க வேண்டும்.

INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்
INCOME TAX | வரிக் கணக்குத் தாக்கல்

> ஐ.டி.ஆர்-3 படிவத்தைத் தாக்கல் செய்யும் வர்த்தகர்களுக்கு (Traders) கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயையும் லாபத்தையும், பொதுவான வணிக வருமானமாகக் காட்டாமல், இனி தனியாகக் காட்ட வேண்டும்.

> இன்ட்ரா டே (Intraday) வர்த்தகம் மற்றும் இதர வணிகம் சார்ந்த விவரங்களையும் தனித்தனிப் பிரிவுகளில் இன்னும் விரிவாகக் குறிப்பிட வேண்டும்.

> வர்த்தகர்கள் தங்களின் ஐடிஆரில் குறிப்பிடும் எண்கள், புரோக்கர் தரும் அறிக்கைகளுடனும் கணக்குப் புத்தகங்களுடனும் ஒத்துப்போக வேண்டும்.

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை - வேட்டி: முதல்வருக்கு நன்றி" - நெசவாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெள... மேலும் பார்க்க

`டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; இனியும் ரூ.10 கூடுதலாகப் பெற்றால்..!' - அமைச்சர் விக்னேஷ்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விலைக்கு மேல் ரூ.10 பெறப்படுவதாக கடந்த திமுக ஆட்சியிலிருந்து குற்றச்சாட்டு தொடர்கிறது. தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதும் இந்த நடைமுறை நிறுத்தப்படும் எனக் கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை... என்ன செய்யப்போகிறது அரசு?

கல்வி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் வளர்ச்சிப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது, தமிழ்நாடு. இரண்டு இலக்க விகிதத்தில் வளர்ச்சியை எட்டும் மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. இத்தனை பெருமி... மேலும் பார்க்க

அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்: "நேர்மையாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்" - நீதிபதிகள் கருத்து

மதுரை மனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான ந... மேலும் பார்க்க

புதிய EPF திட்டம்: எதற்கெல்லாம், எத்தனை முறை பாதியில் பணம் எடுக்க முடியும்?

சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026'-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும். இந்தப் புதிய திட்டத்த... மேலும் பார்க்க

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் 2026'-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு. புதிய திட்ட... மேலும் பார்க்க