செய்திகள் :

அயோத்தி கோயிலில் தொடரும் சர்ச்சை: IAS அதிகாரி காணிக்கையாக வழங்கிய ரூ.5 கோடி தங்க புத்தகம் மாயம்!

post image

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையில், புதிதாக முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் எஸ்.லட்சுமிநாராயணன், தான் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பூசப்பட்ட ராமசரிதமனஸ் பிரதி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அயோத்தி மற்றும் பத்ரிநாத் கோயில் உண்டியல் பணத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமிநாராயணன் குடும்பம், அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள ஆன்மிகப் புத்தகத்தை நன்கொடையாக வழங்கி இருந்தார்.

இது குறித்து லட்சுமி நாராயணன் கூறுகையில், ''தங்கம் பூசப்பட்ட புனித நூல், எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரால் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.

இந்த பிரதியில் பயன்படுத்தப்பட்ட தங்கம் சாதாரண தங்கம் அல்ல. எனது மறைந்த தாயாரின் பாரம்பரிய நகைகள் அனைத்தும் உருக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்பட்ட தங்கத்தைக் கொண்டே இந்த புத்தகத்தின் பக்கங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகே, இந்த ராமசரிதமனஸ் பிரதியை அயோத்தி கோயிலுக்குக் காணிக்கையாக வழங்க முடிவு செய்தோம்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த புனித நூலை நேரில் பார்த்து அதன் மூலம் ஆசி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. தங்கம் பூசப்பட்ட இந்த விலைமதிப்பற்ற ராமசரிதமனஸ் பிரதியை ராமர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியபோது, அதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசீதும் வழங்கப்படவில்லை. உணர்வுப்பூர்வமான காணிக்கையான ராமசரிதமனஸ் புத்தகத்தை அயோத்தி அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம். அதைத் தகுந்த இடத்தில் வைக்கக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்துச் சம்பத் ராயை நேரில் சந்தித்து முறையிட்டும் திருப்தியான விளக்கம் கிடைக்கவில்லை'' என அவர் குறிப்பிட்டுள்ளார். ராமர் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கு தொடர்பாக ஏற்கெனவே தீவிர விசாரணை நடந்து வரும் வேளையில், இந்த முன்னாள் உயர் அதிகாரியின் புகார் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காவல்துறையினரின் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்புகார் கோயில் நிர்வாகத்திற்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபு தேவாவுக்கே சவால் விடுவாங்க போல; 'Mukkabula' பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாவை அதிரவைத்த ஆசிரியை!

நடனப் புயல் பிரபு தேவாவின் நடன அசைவுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு பாடலுக்கு ஆடி, பார்வையாளர்களைக் கவர்வது எளிதான காரியமல்ல. ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த மோதி பெஹரா என்ற பெண்மணி அதைச் செய்துகாட்டி இணையத்தில் ப... மேலும் பார்க்க

Lamborghini ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்; சாவியைக் கொடுத்தனுப்பி, ஆட்டோ ஓட்டிய தொழிலதிபர் | Viral

பெங்களூருவில், போக்குவரத்து சிக்னலில் நடந்த ஒரு சாதாரண உரையாடல், மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. தனது லம்போர்கினி காரை ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம், காரின் சாவியைக் கொடுத்துவிட்டு, அந்த ஆட்டோவை... மேலும் பார்க்க

'ஆடைகளைக் கிழித்து, போலீஸாரை அழைப்பேன்' - வீட்டில் புகுந்து திருடி சிக்கிக்கொண்ட பெண் மிரட்டல்

ஜெய்ப்பூரில் உள்ள மொஹானா பகுதியில் ஒரு வீட்டின் படுக்கையறைக்குள் புகுந்து நகைகளைத் திருடிய பெண் ஒருவர், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சிக்கினார். வீட்டின் உரிமையாளர் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டியதால் ம... மேலும் பார்க்க

'அடேய் பசங்களா.. விளையாடுற இடமா அது!'- ரூ.5.04 கோடி காரில் கீறல்: பெற்றோரை கோர்ட்டுக்கு இழுத்த நபர்

விளையாட்டு பொருளாக மாறிய பெராரி கார்!சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தின் 'குன்மிங்' (Kunming) நகரில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நபர் ஒருவருக்குச் சொந்தமான சிக... மேலும் பார்க்க

மொபைல் போனில் பேசியபடி சென்ற கூலித்தொழிலாளி; மூடி திறந்திருந்த சாக்கடை குழியில் விழுந்து இறந்த சோகம்

மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் இரண்டு நாள்களுக்கு முன்பு செம்பூரில் மரம் விழுந்து 11 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தான். தற்போது சாக்கிநாகாவில் மழையின்போது அஸ்லாம் இசாக் ஷ... மேலும் பார்க்க

4 ஆண்டுகளாக தபாலை பதுக்கிய தபால்காரர்; வீட்டில் 6 மூட்டைகளில் சிக்கிய அஞ்சல் - திருப்பூர் அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்த... மேலும் பார்க்க