செய்திகள் :

"திமுகவே எங்களுடன் உறவில்லை என்று அறிவித்தது; அந்த நட்பை நான் சிதைக்கவில்லை" - திருமாவளவன்

post image

நேற்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழா நடைபெற்றது.

அந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது...

"திமுக கூட்டணியில் இருந்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அம்பேத்கரின் நூலை வெளியிட்ட போது நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் அங்கேயே இருக்கும் என்று குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்பே எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனப்பட ஒருபோதும் இடம் தர மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஸ்டாலின், திருமாவளவன்
ஸ்டாலின், திருமாவளவன்

தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக தலைமைக்குத் தகவல் கொடுத்தேன்.

அமைச்சரவையில் நானே சேரலாம் என்று ரவிக்குமார் போன்றோர் சொன்னபோதும், 30 ஆண்டு காலம் உழைத்த தம்பி வன்னி அரசு போன்றவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்று பெருந்தன்மையுடன் நடந்துகொண்டேன்.

முதலமைச்சரைச் சந்தித்தபோது, மதச்சார்பற்ற சக்திகளை அவர் அழைத்திருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினேன்.

திமுக-வே எங்களுடன் உறவில்லை என்று அறிவித்ததே தவிர, நான் அந்த நட்பை ஒருபோதும் சிதைக்கவில்லை. அரசியல் வேறு, தனிநபர் நட்பு வேறு.

தமிழிசை, பொன்னார், அண்ணாமலை, அன்புமணி என யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது எனது பண்பு. டெல்லி அரசியலைப் போல தமிழகத்திலும் அரசியல் நாகரிகத்தை முன்னெடுத்தவன் நான்".

"திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை" - மு.வீரபாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 'மார்க்ஸ் மாமணி விருது' விருதை பெற்றார். அதன் பிறகு, அந்த விழாவ... மேலும் பார்க்க

`தற்கொலையை ஆணவக் கொலையாக திரித்துக் கூறி சிலர் ஆதாயம் தேட முயல்கிறார்கள்!' - அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீவிரமாக களமாடி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நேற்று சேலத்தில் செய்தியாளரைச் சந்தித்து பேசுகையில், "‌மயிலாடுதுறை சாத்தங்குடி‌ கிராமத்தில் நட... மேலும் பார்க்க

வெளிநாட்டிற்கு தப்பிவிடக் கூடாது - செந்தில் பாலாஜிக்கு 'Look out Notice': தவெக ஆட்சியை கவிழ்க்க சதி? | Live Updates

செந்தில் பாலாஜிக்கு 'Look out Notice'தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடிக்கு பேரம் பேசியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனுவை அளித்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ டாக்... மேலும் பார்க்க

`வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்கெல்லாம் ஓடியவர்தான் ஆதவ் அர்ஜுனா; இனியும் அவர்...' - கே.பி.முனுசாமி

"தவெகவுடன் அதிமுக இணையும் என்று இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார். கே.பி.முனுசாமிஅதிமுக முன்னாள் அமைச... மேலும் பார்க்க

மேகதாது: டெல்டா விவசாயிகள் அச்சத்தைப் போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! - அன்புமணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கக் கூடிய மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டி விடுமோ? எ... மேலும் பார்க்க