மேகதாது: டெல்டா விவசாயிகள் அச்சத்தைப் போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வே...
Sai Abhyankar: "நெப்போடிசம்னு சொல்வாங்கனு முதல்ல பாட மறுத்தார்; ஆனா..." - சாய் அபயங்கர்
2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ரெட் கார்பெட் வரவேற்பில் நம்மிடையே சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில், "மக்களிடம் இருந்து கிடைக்கும் இந்த வரவேற்பைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நிஜமாகவே நிறைவாக இருக்கிறது. அவர்கள் என் மீது காட்டும் அன்பும் அக்கறையும் அளவிட முடியாதது.
அதனால்தான், இதனை ஒரு பெரிய பொறுப்பாக நினைத்து, இன்னும் அதிகக் கவனத்துடனும் உழைப்புடனும் தொடர்ந்து சிறப்பான இசையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இப்போது அடுத்தடுத்த புராஜெக்டுகளின் வேலைகள் போய்க்கொண்டிருப்பதால், ஒரு நாளைக்குக் குறைந்தது 17 முதல் 18 மணி நேரம் வரை ஸ்டுடியோவிலேயே உழைக்க வேண்டியிருக்கிறது.
அதனால் தூக்கம், சாப்பாடு எல்லாமே எனக்கு இப்போது ஸ்டுடியோவில்தான்!" என்றவர், "'டியூட்' படத்தில் அவருடைய தந்தையும், பின்னணி பாடகருமான திப்புவைப் பாட வைத்தது குறித்து, "அந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் 'நல்லாயிரு போ'தான். அந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான குரல் தேவைப்பட்டது.

பல நாட்கள் யோசித்துப் பார்த்தும் பொருத்தமான ஆப்ஷன் கிடைக்கவில்லை. ஆல்பம் ரிலீஸாக இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், திடீரென என் அப்பாவிடமே 'நீங்க பாடுறீங்களா?' எனக் கேட்டேன்.
ஆனால், அவர் எடுத்தவுடனேயே 'வேண்டாம்டா, நெப்போடிசம் என்று பேசுவார்கள்' என மறுத்துவிட்டார். அதற்கு நான், 'அதையெல்லாம் நான் என்றுமே கவனித்தது இல்லை.
எனக்காகப் பாடினால் நன்றாக இருக்கும்' என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்து ரெக்கார்ட் செய்தேன். என்னுடைய அப்பாவும் பாடலைப் பயங்கரமாகப் பாடிவிட்டார்" எனப் பகிர்ந்துகொண்டார்.


















