செய்திகள் :

Aamir Khan: குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற ஆமீர் கான் - கெளரி ஸ்ப்ராட் திருமணம்!

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான், தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை மும்பை பான்ட்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

சில நாள்களுக்கு முன்பு தனக்கும் கெளரி ஸ்ப்ராட்டுக்கும் ஜூன் 5-ம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக ஆமீர் கான் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.

குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்குத் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆமீர் கான்
ஆமீர் கான்

இவர்களின் திருமணப் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தத் திருமண நிகழ்வில் கௌரியின் மகன் குயினும், ஆமீர் கானின் மகன்கள் ஆசாத், ஜுனைத் கான், மகள் ஈரா கான் மற்றும் ஆமீர் கானின் தாயார் ஜினத் உசேன் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பதிவுத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இவர்களோடு 'லகான்' படத்தின் இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், அரசியல் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கெளரியுடன் ஆமீர் கான்
கெளரியுடன் ஆமீர் கான்

நடிகர் ஆமீர் கான் கடந்த 1986-ம் ஆண்டு ரீனா தத்தாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஜுனைத் கான் என்ற மகனும், ஈரா கான் என்ற மகளும் உள்ளனர். 16 ஆண்டுக்காலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.

இதன் பிறகு, பிரபல திரைப்பட இயக்குநரான கிரண் ராவை ஆமீர் கான் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், தற்போது தனது நீண்டகாலத் தோழியான கௌரி ஸ்ப்ராட்டை ஆமீர் கான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

லிவ் இன் பார்ட்னர் கெளரியுடன் திருமணம் - தேதியை அறிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர்கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் பெங்களூரை சேர்ந்த கெளரி என்ற பெண்ணுடன் லிவ் இன் உறவில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கெளரியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆமீர்க... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் இந்து மதத்துக்கு மாறினாரா? - அஸ்ஸாம் கோயிலில் தரிசனம் குறித்து விளக்கம்

ஆடை அணிவதில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் பாலிவுட் நடிகையும், டிவி பிரபலமுமான உர்ஃபி ஜாவேத், எதைச் செய்தாலும் சர்ச்சைக்குறிய வகையில் செய்வது வழக்கம். அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்... மேலும் பார்க்க

Salman: 50 ஆண்டுகளாக வசிக்கும் வீட்டைக் காலி செய்யும் நடிகர் சல்மான் கான்; காரணம் என்ன?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கி... மேலும் பார்க்க

"சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையில்லை" - பிரியங்கா சோப்ரா

வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்று... மேலும் பார்க்க

களைகட்டிய சரத் பவார் பேத்தியின் திருமணம்; நடனமாடிய 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக் கான்!

தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியாசுலேயின் மகள் ரேவதிக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் தொழிலதிபர் சரங் லகானியைத் திருமணம் செய்தார். இதையொட்டி நேற்று இரவு சிறப்பு இசை நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமறைவு

மும்பை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்தவர் மகேஷ் பாட்டீல். இவர் பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி குடும்பத்தினரிடம் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பிரிட்டன... மேலும் பார்க்க